பிரதமர் மோடிக்கு எதிராக பாஜக தலித் எம்.பி.க்கள் திடீரென போர் கொடி
2018-04-08@ 19:43:28

லக்னோ: பிரதமர் மோடிக்கு எதிராக பாரதிய ஜனதா தலித் எம்.பி.க்கள் திடீரென போர் கொடி தூங்கியதால் அக்கட்சியின் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை திட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்பினர் கடந்த 2-ம் தேதி அன்று நாடு தழுவிய பந்த் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக புகார் இருந்தது.
இதனை உறுதிப்படுத்தி சென்னையில் பேட்டியளித்துள்ள பாஜக எம்.பி உதித்ராஜ் தலித் மக்கள் பழிவாங்கப்படுகின்றனர் என்று கூறினார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலித் எம்.பி.க்கள் மூன்று பேர் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு எந்த நன்மையையும் செய்யவில்லை என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். இதனிடைய டெல்லியில் பேட்டியளித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கடந்த வாரம் நடைபெற்ற பாரத் பந்த் போராட்டம் வெற்றிபெற்றதால் நாடு முழுவதும் இருக்கின்ற தலித் மக்கள் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் செய்திகள்
டெல்லியில் 1 கோடியை கடந்தது பரிசோதனை..! கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றி அடைந்துள்ளோம்: முதல்வர் கெஜ்ரிவால்
மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை மேலும் ஒருவாரம் நீட்டிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு..!!
இந்தியாவில் 2-ம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் போது மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக தகவல்?
சட்டவிரோத கட்டுமான வழக்கில் நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி.: மும்பை ஐகோர்ட் உத்தரவு
கொரோனா இருக்கிறதா? இல்லையா!: சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் சசிகலா..!!
ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறதா பாஜக!: காவல்துறையால் தேடப்படும் புதுச்சேரி பெண் தாதா எழிலரசி பா.ஜ.க-வில் இணைந்தார்..!!
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்