SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்துக்கான தண்ணீர் பறிப்பு: டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி

2018-02-16@ 21:30:37

திருச்சி: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டிருப்பது  டெல்டா விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்து அவர்கள் அளித்த பேட்டி: காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் மன்னை ரங்கநாதன் (1983ல் உச்சநீதிமன்றத்தில் காவிரி நடுமன்றம் அமைக்க கோரி வழக்கு தொடர்ந்தவர்):உச்ச நீதிமன்ற தீர்ப்பில்  நதிகளை யாரும் சொந்தம் கொண்டாடக்கூடாது, மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன். தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை 177.25 டிஎம்சியாக குறைத்துள்ளது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 20 டிஎம்சி இருப்பதாக கூறியுள்ளது.  இந்த 20 டிஎம்சி நீர் மட்டம், டெல்டா மாவட்டங்களில் கடல் நீர் புகுவதால் உப்பு நீராக மாறிவிட்டதை என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. 2 ஆயிரம் ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் நெற்பயிரை மட்டுமே சாகுபடி செய்து வருகிறோம். மாற்றுப்பயிர் பற்றி யோசிக்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்றார்.விவசாயிகள் சங்க கூட்டியக்கமாநில துணைத்தலைவர் சுகுமாறன்: காவிரி யாருக்கும் சொந்தம் இல்லை என்றதற்காகவும்,கர்நாடகம் புதிய அணை கட்டக்கூடாது என கூறியதற்காகவும், மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்என்று கூறியதற்காகவும் இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில் தண்ணீர் குறைத்ததை எதிர்க்கிறோம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு:  காவிரியை யாரும் சொந்தம் கொண்டாடக்கூடாது, மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதே வெற்றி நமக்கு வெற்றிதான். மேலாண்மை வாரியம் அமைத்தாலே நமக்கு சேரவேண்டிய தண்ணீர் கிடைக்கும். 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டாலும் மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்தால் நமக்கு  இப்போது கிடைப்பதை விட கூடுதலாக தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளதாக நம்புகிறேன். மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்காவிட்டால் டெல்லியில் மீண்டும் போராடுவேன் என்றார்.தமாகா விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன்: 1991 இடைக்கால தீர்ப்பில் 205 டிஎம்சி வழங்க உத்தரவிடப்பட்டது. அது 2007ல் 192 டிஎம்சி ஆனது. தற்போது 177.25ஆக குறைந்துவிட்டது. தமிழக அரசு சட்ட போராட்டத்தில் கோட்டை விட்டது. உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நல சங்க செயல் தலைவர் ராஜாராம்:  இந்த உத்தரவு தமிழகத்துக்கு பாதிப்பு தான். இதை கர்நாடக அரசு  செயல்படுத்துமா  என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் நல சங்க தலைவர் விஸ்வநாதன்: தமிழகத்துக்கு அநீதியான தீர்ப்பு. கர்நாடகாவுக்கு சாதகமாகவும், தமிழகத்துக்கு பாதகமாகவும் உள்ளது. போராட்டம் தமிழகத்துக்கான தண்ணீரை குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து டெல்டாவில் பல இடங்களில் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாய நல சங்கம் ஆகியவற்றின் சார்பில் திருவாரூர் பஸ் நிலையம் அருகே இன்று சாலை மறியல் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, தமிழக விவசாயிகள் நலசங்க மாநில தலைவர் சேதுராமன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதேபோல்  டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இன்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்