SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக தலைவர் கருணாநிதி அழைப்ப

2012-02-24@ 01:09:34

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திராவிட இயக்க 100ம் ஆண்டு தொடக்க விழா வரும் 27ம் தேதி திமுக சார் பில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் மாலை 5 மணிக்கு கழக பொருளாளர் மு.க.ஸ்டா லின் வரவேற்புரை ஆற்றிட, எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் நடை பெறவுள்ளது. தொடக்க விழாவில்    கி.வீரமணி, உச்ச நீதிமன்ற  ஓய்வு பெற்ற நீதிபதி மோகன், பேராசிரியர் நன்னன், சுப. வீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். திராவிட இயக்கத்தின் தோற்றம், அதன் மேன்மை பற்றியும் பேசுகிறார்கள்.

''ஒருவன் உள்ள வரையில் ,  குருதி
ஒரு சொட்டு  உள்ளவரையில்
திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச்
சிறிதும் பின்னிடல் இல்லை''
என்றார் பாரதிதாசன்.

1856ல் ''திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்'' என்ற அரிய ஏட்டை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற மொழி நூல் அறிஞர் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் என்று குறிப்பிட்டார். தென்னிந்திய மொழி களையும், அவற்றைப் பேசும் மக்களையும் குறித்து எழுதிய போது, ''திராவிடர்'' என்ற பெயரை அவர் தான் முதன்முதலாக உபயோகித்தார் என்ற குறிப்புகளும் உள்ளன.

பிட்டி தியாகராயர் திராவிட இனத்தின் மீது மாறாத அன்பு கொண்டவர்.தொடக்கத்தில் தியாகராயர் பெரும் வைதீகராக இருந்தார். தன் இல்லத்திலேயே சிலை வைத்து புரோகிதரைக் கொண்டு பூஜை புனருத்தாரணம் எல்லாம் செய்து வந்தார்.   அப்படிப்பட்டவர் டாக்டர் நடேசன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, வைதீகத்திலிருந்து விலகி வந்து, பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பில் அதிகத் தீவிரம் காட்டத் தொடங்கினார்.

  அப்படிப்பட்ட தியாகராயர் 1917ல் நடைபெற்ற சென்னை மாகாண முதலாவது நீதிக் கட்சி மாநாட்டில் உரையாற்றும்போது, பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று. திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத் துதித்தோர் யாம் என்று பெருமை பேசினாரில்லை.  பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பித்தோரும் நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே. அவ்வருணாச்சிரமக் கோட்டையை இடித் தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார், முடியவில்லை. பின்னர் வந்த பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர், தோற்றனர். ராமானுசரும் புரோகிதக் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழியெல்லாம் முயன்றார், தோல்வியே கண்டார்.

 பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை, அண்டாமை, பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும்  படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையை தகர்த்தெறிய, இதுவே தக்க காலம்.  இதுவே தக்க வாய்ப்பு என்று முழங்கினார். பி அண்ட் சி மில்லில் அப்போது ஒரு வேலை நிறுத்தப் போராட்டம். அதுகுறித்து தியாகராயருக்கும், ஆளுநராக இருந்த வெல்லிங்டன் பிரபுவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, அதில் ஆத்திரமடைந்த தியாகராயர் வெளியே வந்து விட்டார்.  அப்போது முதலமைச்சர் பதவியில் இருந்த பனகல் அரசர் தியாகராயர் வெளியே வந்ததைக் கேள்விப்பட்டு, உடனடியாக ஆளுநரைச் சந்தித்து,

எம் தலைவரிடம் மன்னிப்புக் கேட்காவிட் டால், எங்கள் மந்திரிசபை ராஜினாமா செய்யும் என்று தெரிவித்தாராம். ஆளுநரும் அவ்வாறே உடனடியாக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தாராம். டாக்டர் நடேசனுக்கு துணை நின்ற மற்றொருவர் டாக்டர் டி.எம். நாயர். ஆரியர் வருகையிலிருந்து அவர் பேச்சைத் தொடங்கினால், இடையிலே புராண, இதிகாசக் கதைகளையெல்லாம் கூறி மக்களை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தக் கூடிய பேச்சாளர். தென்னகத்தில் ஒன்றிரண்டு தவிர, மற்ற எல்லாப் பதவிகளிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து விட்டார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகளாக  நியமிக்கப்பட்ட ஒன்பது இந்தியரில், எட்டு பேர் பார்ப்பனர்கள்,

ஒருவர் நாயர். உதவி கலெக்டர்கள் 146 பேரில் 77 பேர் பார்ப்பனர்கள். 125 மாவட்ட நீதிபதிகளில் 93 பேர் பார்ப்பனர்கள். மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள், இத்தனை வேலைகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இந்தப் புள்ளி விவரங்களை அடுக்கிச் சொல்லி, இந்த அநீதியை இப்படியே தொடர விடலாமா? என்று கர்ச்சிப்பார்.   

 டாக்டர் டி.எம். நாயர் 7,10,1917ல் சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும் சர். பிட்டி. தியாகராயர் 20,12,1918ல் நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட ''பார்ப்பன ரல்லாதார் கொள்கை விளக்கம்'' என்ற அறிக்கையும் திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் என்று போற்றப்படுகின்றன.
டாக்டர் நாயரின் புகழ் பெற்ற அந்த உரையில், வீரத் திராவிடர்களே என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். லண்டனிலும், சென்னையிலும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்கிறார்கள். நான் எம்.டி. பட்டதாரி. எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது.  என் செலவு போக, என் வருமானத்தில் மீதப்படும் பணத்தையெல்லாம், என்னருமைத் தலைவர் பிட்டி தியாகராயரைப் போன்று, உங்களைப் போன்ற திராவிட மக்களைத் தட்டி எழுப்பும் நீதிக் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமைப்படுகிறேன்.

திராவிடத் தோழர்களே நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியர்களுக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான்,  நம் மக்களுக்குப் பலம் வரும். நம் எதிர்க் கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும். உண்மை மக்களாட்சி உதயமாகும் என்று முழங்கியதைத்தான் நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.

''திராவிட இயக்க வரலாறு'' என்ற  முரசொலி மாறன் எழுதிய நூலில், உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால் உடனே தனது நியமன அதிகார வரம்பிற்குட் பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்துவரும் வழக்கமாகும் என்று எழுதிய தோடு அதற்கு உதாரணங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

 வருவாய்த் துறை வாரியம் ஒருமுறை ஆய்வு நடத்திய போது ஜி. வெங்கட்ரமணையா என்கிற உயர் பதவி வகித்த பிராமணருக்கு உறவினர்களும், தொடர்புடையவர்களும் மாத்திரம் அந்தத் துறையில் 49 பேர் இருந்தது தெரியவந்ததாம். 1890 களில் செங்கற்பட்டிலும், சென்னை நகரிலும் தோன்றிய வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பம் (புகழ் பெற்ற சர். பாஷ்யம் அய்யங்கார் வகையறா) ஆங்கிலேயர் ஆட்சியில் கிடைக்கும் உத்தியோகங்களையெல்லாம் நன்கு நுகர்ந்தது.

 1861லிருந்து 1921 வரை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஐவர் சட்டசபை உறுப்பினர்களாகவும், இருவர் அட்டர்னி ஜெனரல்களாகவும், மூவர் உயர்நீதி மன்ற நீதிபதிகளாகவும், மூவர் ஸ்மால்காஸ் கோர்ட் நீதிபதிகளாகவும், மாண்டேகு,செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தில் உதயமான ஆட்சியில் ஒருவர் உள்துறை அமைச்சராகவும், மூவர் மாநில அரசின் துணை செகரட்டரிகளாகவும் இருந்திருக்கின்றனர்.

மேலும் பலர் தாசில்தாரர்களாகவும், பப்ளிக் பிராசிகியூட்டர்களாகவும், டெபுடி கலெக்டர்களாகவும் இருந்தனர் என்று மாறன் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த உண்மை வரலாறுகளையெல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவு படுத்தும் வகையில்தான் திராவிட இயக்க 100ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நம்மைப்பற்றி புரிந்துகொள்ள தெரிந்து கொள்ளத்தக்க பல விவரங்களை சான்றோர் பலர் விளக்கிட உள்ளார்கள்.

 திராவிட இயக்க 100ம் ஆண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகிறோமே, தொடக்க விழாவில் கலந்து கொள்ளாமல் விட்டால் என்ன என்று நினைத்து விடக் கூடாது. ஏனென்றால் இது நம் இன எழுச்சிக்கு எடுக்கும் விழா.  இடையில் இரண்டு நாட்கள்தான் 27ம் தேதியன்று நேரில் சந்திப்போம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

why do husbands have affairs married men and affairs wife affair
walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards
coupons for cialis printable site free discount prescription cards

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்