SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்!

2017-12-08@ 16:38:05

கோவை: கோவையில் முதல் முறையாக புதுமையான விதத்தில் ஆன்லைன் மூலம் கீரை விற்பனை நடந்து வருகிறது. ஸ்ரீராம் பிரசாத் என்பவர் கீரை விற்பனைக்கென 'கீரைக்கடை.காம்' எனும் பெயரில் இணையதளம் ஒன்று துவங்கியுள்ளார். இவர் ஐடி-யில் வேலை செய்து வந்தவர் ஆவார். விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் வேலையை விட்டு தற்போது கீரை விவசாயம் செய்து அதை இணையம் வழியாக விற்பனை செய்து வருகிறார்.

கீரைகளை தங்களது சொந்த பண்ணையில் மட்டுமின்றி அருகில் உள்ள பகுதியான இருகூர், சூலூர், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக விற்பனைக்கு எடுத்துகொள்வதாகவும், அதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு அதில் தாங்களே கீரை விவசாயம் செய்து வருவதாவும் அவர் கூறியுள்ளார். தற்போது 40 வகையான கீரைகள் வழங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் 100 வகையான கீரைகளைக் விற்பனைக்கு கொண்டுவருவது மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் கடையைக் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீராம் பிரசாத் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்