SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் பாகிஸ்தானில் பயங்கர கலவரம்

2017-11-26@ 01:04:45

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் தெரிக் இ லாபெய்க் கட்சி நடத்திய  முற்றுகை போராட்டத்தை கலைக்க முயன்றபோது பயங்கர கலவரம் வெடித்தது. இதனால்  அங்கு அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பதவியேற்கும் மக்கள் பிரதிநிதிகள் சத்திய பிரமாணம்  செய்யும்போது அதில் சில வரிகளை மாற்றி பிரமாணம் எடுக்கலாம் என்று  சட்டத்துறை அமைச்சர் ஜஹித் ஹமீது சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். இதை  எதிர்த்து, அவருக்கு எதிரான போராட்டத்தை மதவாத கட்சியான தெரிக் இ லாபெய்க்  தொடங்கியது. இரண்டு வாரங்களாக  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றும் பணி நேற்று காலை  தொடங்கியது. இஸ்லாமாபாத்தில் மட்டும் 8 ஆயிரம் அதிகாரிகள் இதில்  ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே பயங்கர மோதல்  வெடித்து கலவரமாக மாறியது.

போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன.  கல்வீச்சு தாக்குதல், தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததால் இஸ்லாமாபாத் நகரம்  முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதில் ஒருவர் பலியானார். 150  பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல், கராச்சி உட்பட பாகிஸ்தான்  முழுவதும் கலவரம் பற்றிக்கொண்டது. கலவரத்தை கட்டுப்படுத்த வாட்ஸ்அப், பேஸ்புக்,  டுவிட்டர், யூ டூப் உள்ளிட்ட அனைத்து சமூகவலைத் தளங்களும் முடக்கப்பட்டன.  மேலும் அனைத்து டிவி சேனல்கள் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில்  அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்