SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீசை குற்றம்சாட்ட முடியாது: அருண் சக்திகுமார், நெல்லை மாவட்ட எஸ்.பி.

2017-10-30@ 00:44:59

நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டியை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் யார், யார் வட்டி கொடுக்கிறார்கள் என்ற பட்டியலை தயாரிக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பட்டியல் தயாரித்தவுடன் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். அவர்கள் மீது அளிக்கப்பட்ட புகார்கள் உண்மையென தெரியவந்தால் உடனே கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.கந்துவட்டிகாரர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக செக்யூரிட்டி ஆக்ட் படி 107, 110 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும். கந்துவட்டி சட்டம் கொண்டு வரப்பட்ட 2003, 2004ம் ஆண்டுகளில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், அதன் பிறகு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டதாக கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கந்துவட்டி தொடர்பாக 302 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 18 பேரிடம் விசாரணை நடக்கிறது. கந்துவட்டி பிரச்ைனக்கு காவல்துறை மீது மட்டும் குற்றம் சாட்ட முடியாது. காவல்துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.காசிதர்மம் தொழிலாளி இசக்கிமுத்து குடும்பத்தினர் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அச்சன்புதூர் காவல் நிலைய போலீசாரிடமும் விசாரணை நடக்கிறது. விசாரணை முடிந்தால் தான் எதுவும் கூற முடியும். விசாரணை முடிய மேலும் ஒரு வாரம் ஆகும். கந்துவட்டி வழக்குகளில் சொத்துக்களை பறிமுதல் செய்ய காவல் துறைக்கு அதிகாரம் இல்லை.

நீதிமன்றம் மூலம் தான் நடவடிக்கை எடுக்க முடியும். நிலமோசடி வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டால் சொத்துகள் பறிமுதல் செய்து கொடுக்கப்படும். வட்டியை பொறுத்தவரை செக்சன் 5, 6, 8ன் படி அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக யாரும் வட்டி வசூலிக்கக்கூடாது. அவ்வாறு வசூலித்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நிர்ணயித்த தொகையை நீதிமன்றத்தில் செலுத்தலாம். கந்துவட்டி சட்டம் குறித்து தற்போதயை போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்று கூறுவது தவறு. இது தொடர்பாக வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துதான் வருகிறோம். பொதுமக்களிடம் கந்துவட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்