SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1000 கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது: சி.எச்.வெங்கடாசலம், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொது செயலாளர்

2017-10-30@ 00:44:57

வங்களில் விவசாயக்கடன், கல்விக்கடன், நகைக்கடன், வீடு கட்ட கடன், தனிநபர் கடன், தொழில் தொடங்க கடன் என்று ஏகப்பட்ட கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், மக்கள் இதனை முறையாக பயன்படுத்துவது இல்லை. வங்கிகளுக்கு சென்று கடன் வாங்கினால் அதிக கெடுபிடி செய்வார்கள் என்ற பயம் மக்களிடம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.இந்த பயத்தை முதலில் அவர்கள் போக்க வேண்டும். சரியான விவரங்களுடன் வந்தால் ஒரு நாளிலே வங்கிகள் மூலமாக எவ்வளவு வேண்டுமானாலும் கடன் பெற முடியும். கடனுக்கு வரம்பு என்று எதுவும் கிடையாது. தனி நபரிடம் வாங்குவதை விட வங்கிகளில் வட்டி மிக, மிக குறைவு தான் என்பதை முதலில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு என்று கூறுகிறார்கள். இந்தியாவில் 6 லட்சம் கிராமங்கள் உள்ளன. இதில் 40,000 கிராமங்களில் தான் வங்கி கிளைகளே உள்ளன. ஆயிரக்கணக்கான கிராமங்கள் வங்கி என்று ஒன்று இருப்பதே தெரியாமல் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 10, 20 கிராமங்களுக்கு ஒரு வங்கி என்ற நிலை தற்போது இருந்து வருகிறது. அப்படி இருந்தால் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு எப்படி கடன்கள் வழங்க முடியும். சில கிராமங்களில் வங்கி எங்கு உள்ளது என்பதை தேடி அலையும் நிலையும் உள்ளது. பல கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் வங்கிகளை மக்கள் நாட விரும்புவதில்லை.   சாதாரணமாக தினமும் ஒவ்வொரு வங்கிகளிலும் சுயவேலை செய்ய போகிறோம் என்று வங்கிகளுக்கு நிறைய பேர் வருகின்றனர். அதாவது, பூ வியாபாரம் செய்ய போகிறோம். செருப்பு தைக்கும் கடை வைக்க போகிறோம். எனவே, தேவையான பொருட்களை வாங்க கடன் கொடுங்கள் என்று வருகிறார்கள். அவர்களுக்கு சாதாரணமாக ₹5000 வரை கடன் வழங்கப்படுகிறது. அவர்கள் தினமும் கடனை ₹50, ₹10 என்று செலுத்துகிறோம் என்று கூறுகிறார்கள். அவர்கள் வசதிக்கேற்ப கடன் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது 20 கிராமங்களுக்கு ஒரு வங்கி என்றால் அதில் பணியாற்றும் மேலாளர் எப்படி மக்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து கடன் வழங்க முடியும். இதனால், சாதாரண கடன் வழங்குவதில் கூட அதிக அளவில் சிக்கல் ஏற்படும். எனவே, கிராமங்களில் அதிக அளவில் வங்கி கிளைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பத்தில் 1000 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதனை சுலபமாக்க வேண்டும்.

வங்கிகளில் வழங்கப்படும் கடன் திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்லும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இதற்காக மக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வங்கிகளில் உள்ள மேலாளர்களுக்கு வங்கி நடவடிக்கை மட்டும்தான் தெரியும். அவரால் விவசாய கடன்களை வழங்கியவர்களை கண்காணிக்க முடியாது. எனவே, விவசாயக்கடன் உள்ளிட்டவற்றை வழங்கும் வகையில் விவசாயத்தில் சிறந்து விளங்குபவர்களை வங்கிகளில் அதற்கேற்ற வகையில் பணியில் அமர்த்த வேண்டும். அப்போதுதான் விவசாயத்துக்கு என்று கடன் வாங்கியவர் அந்த பணத்தை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல் நடவடிக்கை எடுக்க முடியும். மக்களிடம் வங்கியில் உள்ள கடன் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அவர்கள் வங்கிகளை நாடும் நிலை ஏற்படும். தனிநபரிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என்று மக்கள் அலைய மாட்டார்கள். போலீசார் உங்கள் நண்பன் என்பதை போல, வங்கி உங்கள் நண்பன் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடன் பெற வங்கிகளை நாட வேண்டும்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliand-monkey

  தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

 • light-show-28

  பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்