பெருநோய்களை விரட்டும் சிறுதானியங்கள்
2017-10-12@ 12:43:52

அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் அதிகளவு ஊட்டச்சத்து இருப்பதாக விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்களில் புரதம், நார்ச்சத்து, நியாசின், தயமின், ரிபோபிளவின் ஆகிய வைட்டமின்கள், இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் ஆகியவையும் அதிகளவு உள்ளன. மேலும் சிறுதானியங்களில் உள்ள பைட்டிக் அமிலம் எனப்படும் தாவர ஊட்டச்சத்து மனிதஉடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதனால் புற்றுநோயினை வெகுவாய் குறைக்கிறது.
100 கிராம் சிறுதானியங்களில் அதிகபட்சமாக 12.5கிராம் புரதச்சத்து உள்ளது. ஆனால் அரிசியில் 7.9கிராம் மட்டுமே உள்ளது. இதேபோன்று அரிசியுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்களில் நார்ச்சத்து 13.6கிராம், இரும்புச்சத்து 18.6மி.கிராம், கால்சியம் 350மி.கிராம் உள்ளன.
உடல்ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு:
சிறுதானியங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் நுண்கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கின்றன. பெருங்குடலின் செயல்பாட்டினை சீராக்குகிறது. உடல்நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியை தூண்டுகிறது. சுறுசுறுப்பிற்கு காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகிறது. சிறுதானியங்களில் அதிகளவில் காணப்படும் மெக்னீசியம், தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றை தலைவலியை தடுக்கிறது. ரத்தஅழுத்ததை சிறுதானியங்கள் சீராக்குவதால் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றன.
சிறுதானியங்களில் உள்ள நியாசின் (வைட்டமின் பி3) ரத்தத்தில் அதிகளவு கொழுப்பு சேர்வதை குறைக்கிறது. அன்றாடம் சிறுதானியங்களை பயன்படுத்துவோர்க்கு இரண்டாம்வகை (அதாவது இன்சுலின் சார்ந்த) சர்க்கரை நோய் வருவதில்லை. அதிகம் சிறுதானியங்களை பயன்படுத்தும் போது ரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் செய்திகள்
கொலம்பியாவை மிரட்டும் நீர்யானைகள்!
உங்க ரத்தத்துக்கு என்ன டயட்?
மியாவ் மியாவ் பூனைக்குட்டி! : பூனை வளர்ப்பது எப்படி?
அம்பானியே ஆளனுப்பி அழைத்தார்! : யார் இவர்?
மரவள்ளிக் கிழங்கின் கதை
2வது அலை கொரோனாவின் புதிய அவதாரம்: அச்சுறுத்தும் 8 அறிகுறிகள்..! அலட்சியம் செய்தால் ஆபத்து
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்