வேப்பிலையின் சிறப்புகள்
2017-10-12@ 10:44:42

வேப்பிலை ஒரு காயகல்ப மூலிகை. இதை உண்பதின் மூலம் அறிவு தெளிவாகும். உடல் வலிமை பெறும். ஆயுளை நீடிக்க செய்யும். இதை உணர்த்தும் வகையில் தேரையர் வெண்பா பாடல்கள் அமைந்துள்ளது. மூன்று வேப்பிலை ஒன்பது மிளகு, 2கிராம் கற்பூரம் இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து தலைவலிக்கு நெற்றியில் பற்றுப் போட தலைவலி உடனே நீங்கும். இலையை சட்னி போல் அரைத்து சுத்தமான வெள்ளைத்துணியில் வைத்துப் பிழிய சாறு வரும். இதை சேகரித்து கண் இமைகளில் மைபோல தீட்டி வந்தால் குணமாகும்.
வேப்பிலையையும், அத்தி இலையையும் சமமாக எடுத்து 4 டம்ளர் நீர் ஊற்றி ஒரு டம்ளர் அளவு வற்றக் காய்ச்சி வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும். வேப்பிலையை நன்றாக அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து அதனுள் கடலை அளவு பெருங்காயம் வைத்து மாதவிலக்கான மூன்று நாட்களுக்கும் தொடர்ந்து உண்டால் வலி குறையும். 50கிராம் வேப்பிலையுடன் 15கிராம் வசம்பை தட்டிப் போட்டு அரைலிட்டர் நீர் சுற்றி கொதிக்க வைத்து 100 மில்லியானதும் இறக்கி வடிகட்டி காலை, மாலை குடித்து வந்தால் வயிற்றோட்டம் குணமாகும்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில், 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கார்களின் விற்பனை சரிவு
ஊரடங்கில் கலக்கிய யூ-டியூப் சேனல்கள்!
திமிங்கலம் பாடும் பாட்டு! கேட்டு தலையை ஆட்டு!!
மண்பாண்டத் தொழிலுக்கு உலகிலேயே முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம்! வேலூரில் அமைகிறது!!
கை, கால்களில் மிக நீண்ட நகங்களை வளர்த்த பெண்
சோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!