SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொன்னேரி ஆரணி ஆற்றில் இளம்பெண் சடலம் மீட்பு : கொலையா? போலீசார் விசாரணை

2017-09-17@ 00:51:08

சென்னை: பொன்னேரி ஆரணி ஆற்றின் கரையோரம் நேற்று காலை சிலர் நடந்துசென்றனர். அப்போது ஆற்றில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணின் சடலம் நிர்வாணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் ஆற்றில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கமாக பொன்னேரி ஆரணி ஆற்றின் கரையோரம் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். நேற்று முன்தினம் இரவுகூட பலர் அவ்வழியே சென்று வந்தனர்.

இந்நிலையில் திடீரென நேற்று காலை ஆற்றின் கரையோரம் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இளம்பெண்ணை யாரேனும் வேறு எங்கேயாவது கற்பழித்துக் கொலை செய்துவிட்டு சடலத்தை ஆற்றில் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்