SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்வாரிய அலுவலகத்தில் கழிவுநீர் தேக்கம்

2017-09-17@ 00:42:32

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை அப்பாசாமி தெருவில் மின் வாரிய அலுவலகம் உள்ளது. வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஒரு பகுதி மக்கள், தங்கள் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு பெறவும், மின் தடை சம்பந்தப்பட்ட புகார்கள் தெரிவிக்கவும், மற்றும் மின் கட்டணம் செலுத்தவும் இங்கு வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்திற்கு எதிரே உள்ள கழிவுநீர் குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால், கழிவுநீர் வெளியேறி  இந்த அலுவலக வளாகத்தில் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இங்கு வேலை செய்யும் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினசரி கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  

அதுமட்டுமின்றி இங்கு மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்களும் கழிவு நீரிலேயே பல மணி நேரம் நின்றுதான் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை  உள்ளது. இதனால், அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து கழிவுநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் கண்டும், காணாமல் உள்ளனர். எனவே, அரசு அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கும்,  பொது மக்களுக்கும் தோற்று நோய் பரப்பும் விதத்தில் தேங்கி கிடக்கும் கழிவு நீரை அகற்றிடவும், கால்வாய் அடைப்பை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்