SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது அவசர கால பராமரிப்பு பணியை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு 120 கோடி பாக்கி

2017-09-17@ 00:25:26

சென்னை: கடந்த 2015ல் பெய்த மழையில் அவசர கால பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு தர வேண்டிய ரூ.120 கோடி பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள மறுத்து விட்ட சம்பவம் பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் இந்த நீர்நிலைகளின் கட்டுமானங்கள் சேதமடைந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சிறிய ஏரிகள், வரத்து கால்வாய்கள் கடுமையாக சேதமடைந்தது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

இதை தொடர்ந்து அந்த மாவட்ட பகுதிகளில் மீட்பு பணிகள், அதாவது கரை உடைந்த பகுதியை தற்காலிகமாக சீரமைப்பது, சாலையில் விழுந்த மரங்களை அகற்றுவது, வெள்ள நீர் சீராக செல்லும் வகையில் முகத்துவாரங்களில் தூர்வாருவது உள்ளிட்ட பல்வேறு தற்காலிக சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை சார்பில் அவசர காலத்தை கருத்தில் கொண்டு ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொண்டனர். இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் ரூ.120 கோடி வரை தர வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், 2 ஆண்டுகளாகியும் அவசர கால பராமரிப்பு பணிக்கு மேற்கொண்ட நிதியை தராமல் நிதித்துறை இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது முக்கியமானது. தற்போது வரை பாக்கி தொகையை தராமல் இழுத்தடித்து வருவதால் இந்த பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை செய்ய ஒப்பந்தாரரர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறும் போது, ‘கடந்த 2015ல் சென்னை மாநகர வெள்ளத்தில் தத்தளித்த போது, அவசர காலத்தை உணர்ந்து உடனடியாக பொதுமக்கள் நலன் கருதி தற்காலிக சீரமைப்பு பணியை மேற்கொண்டோம். ஆனால், எங்களது பணியை அங்கீகரிக்கும் வகையிலாவது அரசு அந்த நிதியை உடனடியாக தந்திருக்க வேண்டும். ஆனால், 2 வருடங்களாகியும் பணத்தை தராமல் இழுத்தடித்த வருகின்றனர்.
இப்படிபட்ட சூழ்நிலையில் ஏதாவது அவசர காலம் என்று அழைத்தால் ஒப்பந்தாரர்கள் எப்படி தற்காலிக சீரமைப்பு பணிக்கு நம்பி வர முடியும். அடுத்த மாதத்தில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதற்குள்ளாவது எங்களது பாக்கி தொகைைய செட்டில் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்