SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 154 புள்ளிகள் உயர்வு

2017-08-16@ 10:45:33

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 154 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 235.44 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 153.61 புள்ளிகள் உயர்ந்து 31,602.64 புள்ளிகளாக உள்ளது. எஃப்எம்சிஜி, ஆட்டோ, மின்சாரம், நுகர்வோர் பொருட்கள், தொழில்நுட்பம், உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36.60 புள்ளிகள் அதிகரித்து 9,830.75 புள்ளிகளாக உள்ளது. நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

டாடா பவர், டெக் மஹிந்த்ரா, ஹெச்.டி.எஃப்.சி, சன் பார்மா மற்றும் ஐடிசி போன்ற நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருந்தும், பாங்க் ஆஃப் பரோடா, லார்சன் அண்ட் டூப்ரோ, கோல் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆசியன் பெயின்ட்ஸ் போன்ற நிறுவன பங்குகள் விலை சரிந்திருந்தும் காணப்பட்டது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.10% சரிந்துள்ளபோது ஹாங்காங்கின் ஹாங் செங் 0.45% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.02% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.02% வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

  • london-vertical-farm-29

    நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்