SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2009-13ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு

2017-07-14@ 01:26:56

சென்னை: 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சின்னத்திரையில் சிறந்த தொடர்கள், சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள், ெராக்கப்பரிசுகள், சான்றிதழ்கள் வழங்குவதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2009ம் ஆண்டு சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு)-திருமதி செல்வம், சிறந்த நெடுந்தொடர் (2வது பரிசு)- வசந்தம், சிறந்த சாதனையாளர்-டெல்லி கணேஷ், வாழ்நாள் சாதனையாளர்-பீலிசிவம், சிறந்த கதாநாயகன்- ஜி.குமார் (உறவுகள், சிவசக்தி), சிறந்த கதாநாயகி-சங்கீதா (திருப்பாவை), சிறந்த குணச்சித்திர நடிகர்- சிவன் சீனிவாசன் (திருப்பாவை), சிறந்த குணச்சித்திர நடிகை வடிவுக்கரசி (திருமதி செல்வம்), சிறந்த வில்லன் நடிகர் ஷிரவன் (தங்கமான புருஷன்), சிறந்த வில்லி நடிகை-கவுதமி (திருமதி செல்வம்), சிறந்த குழந்தை நட்சத்திரம்-ஹரினி (திருமதி செல்வம்), சிறந்த கதாசிரியர் பி.ஆர்.பாலசுப்பிரமணியன் (கோலங்கள்), சிறந்த படத்தொகுப்பாளர்-கே.உதயகுமார் (திருப்பாவை), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) -வினோத் (சிவசக்தி), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)-ஜெயகீதா (கோலங்கள்) ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.

2010ம் ஆண்டு சிறந்த நெடுந்தொடர் (2வது பரிசு)-தென்றல், சிறந்த சாதனையாளர்-சுபலேகா சுதாகர், வாழ்நாள் சாதனையாளர்-பூவிலங்கு மோகன், சிறந்த கதாநாயகன்- தீபக் (தென்றல்), சிறந்த கதாநாயகி-ஸ்ருதி (தென்றல்), சிறந்த குணச்சித்திர நடிகர்-ஜெயமணி (திருமதி செல்வம்), சிறந்த குணச்சித்திர நடிகை -சீமா (தங்கம்), சிறந்த வில்லன் நடிகர் நிழல்கள் ரவி (தென்றல்), சிறந்த வில்லி நடிகை-எம்.தேவிபிரியா (செல்லமே), சிறந்த இயக்குநர்-எஸ்.குமரன் (திருமதி செல்வம்), சிறந்த திரைக்கதையாசிரியர்- அசோக்குமார் (தங்கம்), சிறந்த உரையாடல் ஆசிரியர்-நடராஜன் (முந்தானை முடிச்சு), சிறந்த ஒளிப்பதிவாளர்-மாட்ஸ் (திருமதி செல்வம்), சிறந்த படத்தொகுப்பாளர்- சந்துரு (தென்றல்), சிறந்த பின்னணி இசை அமைப்பாளர்-தீனா (செல்லமே), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)-டி.என்.பாலு கதிரவன் (தங்கம்) ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.

2011ம் ஆண்டு சிறந்த நெடுந்தொடர் (2வது பரிசு)-நாதஸ்வரம், சிறந்த சாதனையாளர்-நித்யா ரவீந்தர், சிறந்த கதாநாயகன்- எஸ்.வீ.சீனு (மாதவி), சிறந்த கதாநாயகி-சந்தோஷி (இளவரசி), சிறந்த குணச்சித்திர நடிகர்-சந்தானம் (திருமதி செல்வம்), சிறந்த குணச்சித்திர நடிகை -ரேவதி சங்கர் (உறவுகள்), சிறந்த வில்லன் நடிகர்-ஆர்.ஆர்.ராமச்சந்திரன் (திருமதி செல்வம்), சிறந்த வில்லி நடிகை-வித்யா (தென்றல்), சிறந்த உரையாடல் ஆசிரியர்-எழில்வரதன் (தென்றல்), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)-கார்த்திக் (திருமதி செல்வம்). 2012ம் ஆண்டு சிறந்த நெடுந்தொடர் (2வது பரிசு)-உதிரி பூக்கள், சிறந்த சாதனையாளர்-கோவை அனுராதா, வாழ்நாள் சாதனையாளர்-எஸ்.என்.பார்வதி, சிறந்த கதாநாயகன்-கர் பிரசாத் (இளவரசி), சிறந்த கதாநாயகி-துர்கா (உறவுகள்), சிறந்த குணச்சித்திர நடிகர்-சேத்தன் கடம்பி (உதிரி பூக்கள்), சிறந்த குணச்சித்திர நடிகை- விஜி சந்திரசேகர் (அழகி), சிறந்த வில்லன் நடிகர்-பாபூஸ் (சிவசங்கரி), சிறந்த வில்லி நடிகை-சாதனா (தென்றல்), சிறந்த உரையாடல் ஆசிரியர்-மருதுசங்கர் (அழகி), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)-தங்கராஜ் (உறவுகள்).

2013ம் ஆண்டு சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு)-வாணி ராணி, சிறந்த நெடுந்தொடர் (2வது பரிசு)- தெய்வ மகள், சிறந்த சாதனையாளர்-குட்டி பத்மினி, வாழ்நாள் சாதனையாளர்- ‘வியட்நாம் வீடு’ சுந்தரம், சிறந்த கதாநாயகன்-வேணு அரவிந்த் (வாணி ராணி), சிறந்த குணச்சித்திர நடிகர்- மௌலி (நாதஸ்வரம்), சிறந்த குணச்சித்திர நடிகை -அனுராதா கிருஷ்ணமூர்த்தி (இளவரசி), சிறந்த வில்லன் நடிகர்- மனோகர் (புகுந்தவீடு), சிறந்த வில்லி நடிகை-ரேகா (தெய்வமகள்), சிறந்த இயக்குநர்-எம்.கே.அருந்தவராஜ் (இளவரசி), சிறந்த கதாசிரியர்-எழிச்சூர் அரவிந்தன் (பொம்மலாட்டம்), சிறந்த திரைக்கதையாசிரியர்-குரு சம்பத் குமார் (இளவரசி), சிறந்த படத்தொகுப்பாளர்-வி.கார்த்திக் (உதிரி பூக்கள்), சிறந்த பின்னணி இசை அமைப்பாளர்-இலக்கியன் (உதிரிபூக்கள்), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)-சபரிநாதன் (தெய்வமகள்), சிறந்த தந்திரக் காட்சியாளர்-எம்.சுப்பிரமணி, எம்.கணேஷ், ஆர்.எம்.நாகராஜ் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cycle_sephiee1

    முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்