SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாகின் பேஸ்புக் கருத்து மருத்துவமனை மீது தாக்குதல் சிவசேனா தொண்டர்கள் கைத

2012-11-21@ 06:37:01

மும்பை: மும்பை பந்தை கண்டித்து பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட பெண்ணின் மாமனார் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய 10 சிவசேனாவினரை போலீசார் கைது செய்தனர்.சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடந்த சனிக்கிழமை இறந்தார். இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதனால், சனிக்கிழமை பிற்பகல் முதல் மறுநாள் மாலை வரை மும்பையில் முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. இதை விமர்சித்து இளம் பெண் சாகின் தாதா, பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டார். மற்றொரு இளம்பெண் ரேணு ஸ்ரீனிவாசன் இதை ஆதரித்து இருந்தார். இது தொடர்பாக சிவசேனா பிரமுகர் செய்த புகாரை தொடர்ந்து, 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தது.இந்த பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், முரளி தியோரா, பத்திரிகை கவுன்சிலின் தலைவர் மார்கண்டேய கட்ஜு உள்ளிட்டோர், இந்த நடவடிக்கை பேச்சு சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது என கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இதற்கிடையே, சாகினின் மாமனார் அப்துல் தாதாவுக்கு சொந்தமான மருத்துவமனையை சிவசேனாவை சேர்ந்த கும்பல் அடித்து நொறுக்கியது. இது தொடர்£பக 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பெண்கள் மீது போலீசில் புகார் செய்த புஷன் சாங்கேயிடம் இது குறித்து கேட்டதற்கு, ‘‘2 பெண்கள் மீதும் போலீசில் புகார் செய்ததில் வருத்தப்பட ஒன்றுமில்லை. நான் அந்த பெண்களில் ஒருவரை சந்தித்து பேஸ் புக்கில் உள்ள கருத்தை நீக்கும்படி கோரினேன். ஆனால், மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது தெரியாது‘‘ என்று தெரிவித்தார்.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
is there a cure for chlamydia phuckedporn.com home std test
sms spy app phone monitoring software spy apps free
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்