தமிழக நிபுணர் குழு உறுதி
2012-02-20@ 00:06:34

நெல்லை : ‘கூடங்குளம் அணுமின் நிலையம் ஏழு கட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள¢ளது. இதனால் பேரலைகள் வந்தாலும் அணு உலைகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை. நாங்கள் மேற்கொண்ட ஆய்வு திருப்திகரமாக முடிந்தது’ என்று தமிழக அரசின் வல்லுநர் குழு அறிவித்துள்ளது. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரூ.13,500 கோடி மதிப்பில் தலா 1000 மெகாவாட் திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அணுமின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த 6 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மக்களின் அச்சத்தை போக்க மத்திய அரசு 15 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இந்தக் குழுவினர் அணுமின் நிலையத்தை பார்வையிட்டு மாநில அரசின் நிபுணர் குழுவினருடன் 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என மத்திய அரசிடம் அறிக்கை அளித் தனர். எனினும் போராட் டக் குழுவினர் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மைய பேராசிரியர் இனியனை அமைப்பாளராக கொண்டு இந்திய அணு சக்தி கழக முன்னாள் தலைவர் சீனிவாசன், சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுஓளி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயராகவன் ஆகிய 4 பேர் கொண்ட வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்தது.
நேற்று முன்தினம் நெல¢லை வந்த இந்த வல்லுநர் குழுவினர் கலெக்டர் செல்வராஜ், டிஐஜி வரதராஜூ ஆகியோருடன் வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்தினர். பின்னர் கூடங்குளம் சென்று 4 மணி நேரம் ஆய்வு நடத்தினர். நேற்று காலை நெல்லை திரும்பிய வல்லுநர் குழுவினர் இந்திய அணு சக்தி கழக அதிகாரிகள், கலெக்டர் செல்வராஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வல்லுநர் குழுவினர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கலெக்டர் செல்வராஜ், எஸ்பி விஜயேந்திர பிதரி, மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, சேரன்மகாதேவி சப் கலெக்டர் பாஜி பகாரே ரோகிணி ராம்தாஸ் ஆகியோர் பங்கேற்றனர். போராட்டக் குழு சார்பில் ஒருங்கிணைப்பா ளர் உதயகுமார், உறுப்பினர்கள் புஷ்பராயன், சிவ சுப்பிரமணியன், ஜெயக்குமார், ராஜலிங்கம், முகிலன¢, ததேயூஸ் ராஜன், கிசோக், லிட்வின் ஆகிய 9 பேர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். மாலை 3.50 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 6.15 மணி வரை நடந¢தது.
பின்னர் தமிழக அரசின் வல்லுநர் குழு அமைப்பா ளர் இனியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு அணு மின் நிலைய கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்களை பார்த்து வரவும், மக்களின் அச்ச உணர்வுகளை அறிந்து வரவும் எங்களை கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து நாங்கள் அணுமின் நிலையத்தை பார்வையிட்டோம். அணு உலைகளை குளிர்விப்பதற்காக கடல் நீர் கொண்டு செல்லும் போது ஒரு மீன் கூட சாகாத வகையில் நேர்த்தியாக உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உள்ளே செல்லும் மீன்களும் கடலுக்கு திரும்பி விடும் வகையில் அந்த அமைப்பு உள்ளது. பேரலைகள் வந்தாலும் கூடங்குளம் அணு உலைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 6.5 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டாலும் தாங்கும் வகையில் அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்படியே பூமி அதிர்வு வந்தாலும் அணு உலைகள் உடனே இயக்கத்தை நிறுத்திவிடும்.
உலகிலேயே முதன் முதலாக அணு உலைகளை குளிரூட்டும் தொழில்நுட்பம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லையென்றாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அணு உலைகளை இயற்கையாக குளிரூட்ட முடியும். ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் டர்பைன்கள், கண்டன்சர் யூனிட் ஆகியவற்றையும் வல்லுநர் குழு பார்வையிட்டது.
அங்கு 6 மெகாவாட் உற்பத்தி செய்யும் டீசல் ஜெனரேட்டர்கள், கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றையும் காண முடிந்தது. அணு உலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 7 விதமான பாதுகாப்பு அம்சங்களை பார்க்க முடிந்தது. இதன் மூலம் எங்களது ஆய்வு திருப்திகரமாக முடிந்தது. போராட்டக் குழுவினருடன் நாங¢கள் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.
எங்களுக்கு அரசு கொடுத்த பணி முடிந்தது. நாங்கள் சென்னை செல்கிறோம். அணுமின் நிலைய அதிகாரிகள் கொடுத்துள்ள ஆவணங்களை பார்த்து, படித்து கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. அதன் பின்னர் தமிழக அரசிடம் அறிக்கை அளிப்போம். எப்போது அறிக்கை அளிப்போம் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எங்கள் வேலையில்லை
கூடங்குளம் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வகையில் 9 பேர் கொண்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினோம். மக்களின் அச்ச உணர்வுகளையும் புரிந்து கொண்டோம். போராட்டக் குழுவினர் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். நிபுணர் குழுவை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அது எங்களது வேலை இல்லை. அந்த பணி எங்களுக்கு வழங்கப்படவில்லை. மக்களை சந்திப்பதற்கு பதில் தான் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டோம் என்று இனியன் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
தேயிலை தோட்டங்களை சூழ்ந்த சோலையார் அணை வெள்ளம்
உத்தமபாளையம் வனப்பகுதிகளில் வன உயிரினங்களை காப்பதற்கு மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்படுமா?: வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் குறுவை பயிருக்கு ரசாயன உரத்திற்கு மாற்றாக இயற்கை உரம் தெளிப்பு: புதிய முயற்சியில் விவசாயி மும்முரம்
உணவுக்குழாயில் சிக்கிய பீட்ரூட் சிகிச்சையால் உயிர் தப்பிய பசுமாடு
அதிமுக ஆட்சியில் ரூ.49 லட்சம் அம்போ... பங்காருசாமி கண்மாய் சீரமைக்கப்படுமா?: போடி பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு
காங்கயம் அருகே 24 ஆண்டுக்கு பிறகு கத்தாங்கன்னி குளம் நிரம்பியது: கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு பாராட்டு
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!