கேரள காப்பகத்தில் 7 சிறுமிகள் பலாத்காரம்: 6 வாலிபர்கள் சிக்கினர்
2017-03-08@ 00:39:27

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் வயநாடு அருகே ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த 7 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா பகுதியில் முஸ்லிம் அமைப்பு நடத்தும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்ளனர். நேற்று முன்தினம் விடுதியை ஒட்டியுள்ள ஒரு கடையில் இருந்து காப்பகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் வெளியே சென்றார். இதை காப்பக ஊழியர் ஒருவர் பார்த்து அதிகாரிகளிடம் தெரிவித்தார். விசாரணையில், அந்த சிறுமி கடையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காப்பக அதிகாரிகள் கல்பெட்டா போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். அப்போது அந்த காப்பகத்தை சேர்ந்த 15 வயதுக்கு உள்பட்ட மேலும் 6 சிறுமிகள் கடையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த 6 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இது தொடர்பாக மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து சிறுமிகளுக்கு கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. இது முடிந்த பின்னரே வேறு சிறுமிகள் இதுபோல் பலாத்காரத்திற்கு ஆளானார்களா என்பது தெரியவரும். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரிடமும் விசாரணை நடத்தியதில், கடையில் பொருட்கள் வாங்க வரும் சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி கடையில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு அதை வீடியோவில் பதிவு செய்து வைத்துக்கொண்டு பின்னர் அதை காண்பித்து மிரட்டியே தொடர்ந்து பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வயநாடு எஸ்.பி. ராஜ்பால் மீனா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரி குருசுகுப்பத்தில் போதை மாத்திரை, பவுடர் விற்ற ஆப்பிரிக்க மாணவர்கள் கைது: சுற்றுலா விசாவில் தங்கியிருந்த இளம்பெண்ணும் சிக்கினார்
புதுகை அருகே கணவருடன் தகராறில் பயங்கரம் கழுத்து நெரித்து 2 குழந்தைகள் கொலை; கொடூர தாய் கைது
திண்டுக்கல் அருகே மான் தோல், நரி பல் வைத்திருந்த ஜோதிடர் கைது
புதுகையில் கஞ்சா விற்ற எஸ்ஐ மகன் உள்பட 5 பேர் கைது
பெரம்பலூர் அருகே சினிமா டைரக்டருக்கு கத்தி வெட்டு: 6 மர்ம நபர்களுக்கு வலை
சேத்துப்பட்டு அருகே சொத்து தகராறில் தம்பி சுட்டுக்கொலை மாஜி ராணுவ வீரர், மனைவியுடன் கைது: பல மணிநேர சமரசத்திற்கு பின் சடலம் போலீசாரிடம் ஒப்படைப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!