மகளுக்கு பாலியல் தொந்தரவு, தந்தைக்கு ஆயுள் உறுதி : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
2017-02-05@ 00:38:04

சென்னை: மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹகிம் (35). இவர் தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை தனது தாயிடம் அந்த குழந்தை கூறியுள்ளது. இதையடுத்து, தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹகிமை போலீசார் கைது செய்து அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி தீர்ப்பளித்தது. தீர்ப்பில், ஹகிமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ஹகிம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றம், ஹகிம் பாலியல் தொந்தரவு செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆவணங்கள் அடிப்படையில்தான் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மகளிர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது.
மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது!
திட்டக்குடி அருகே 10ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை; காரில் கடத்திய கும்பல் கைது
மதுகுடிக்க பணம் தர மறுப்பு, கட்டையால் நண்பருக்கு அடி; வாலிபர் கைது
சென்னையில் கணவரை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவி கைது: போலீசார் விசாரணை
கடைக்கு சென்றபோது கடத்திச்சென்று 11-ம் வகுப்பு மாணவியை திருமணம்; போக்சோவில் வாலிபருக்கு சிறை
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..