கலவரம் நடந்த பகுதியை பார்வையிட சென்ற பாஜ மத்திய குழுவுக்கு மே.வ. போலீசார் தடை
2016-12-25@ 00:19:08

ஹவுரா: ஹவுரா மாவட்டத்தில் கலவரம் நடந்த பகுதியை ஆய்வு செய்ய சென்ற பாஜ மத்திய குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள துலாகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத பேரணியில் இரு தரப்பினருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினர் மீதும் போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். தற்போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், கலவரம் நடந்த பகுதியை ஆய்வு செய்ய பாஜ எம்பிக்கள் ஜகதம்பிகா பால், சத்பால் சிங், மேற்கு வங்க பாஜ தலைவர் திலீப் கோஷ் மற்றும் தேசிய செயலாளர் ராகுல் சிங்கா அடங்கிய குழு கட்சி தொண்டர்கள் புடை சூழ வந்தது. துலாகர் நகருக்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாக அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் உள்ளே செல்வதை அனுமதிக்க முடியாது என்று போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த பாஜ பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அமமாநில பாஜ தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், `‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியல்லை. மம்தா அரசு ஒரு பிரிவினரை சாந்தப்படுத்தும் கொள்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.
மேலும் செய்திகள்
கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்: கட்டாய மதம் மாற்றம் செய்தால் 3 ஆண்டு சிறை
நிலக்கரி ஊழல் விவகாரம் மம்தா மருமகன், மனைவிக்கு சுப்ரீம் கோர்ட் ‘செக்’: டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசை சரத்பவார் கட்சி பலவீனப்படுத்துகிறது: மாநில காங். தலைவர் குற்றச்சாட்டு
ஜமைக்காவில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு
தாடி - மீசை குறித்து சர்ச்சை கருத்து : காமெடி நடிகை மீது வழக்கு
உ.பி வெற்றியை தொடர்ந்து இரவு விருந்து 52 அமைச்சர்களுக்கு ‘வகுப்பு’ எடுத்த மோடி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!