மதுரையில் ரூ.25 கோடிக்கு பழைய நோட்டுகள் மாற்றிய தீவிரவாதிகள்
2016-11-29@ 02:14:48

மதுரை: தீவிரவாத செயல்களுக்காக மதுரையில் ரூ.25 கோடி வரை, இளைஞர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் பழைய நோட்டுகள் மாற்றப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மைசூர் குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் மதுரையிலும், ஒருவர் சென்னையிலும் சிக்கியுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்களிடம் தேசிய புலனாய்வுப்படையினர் நடத்திய விசாரணையில் மேலும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: மதுரையை மையமாக வைத்து அல்கொய்தா தீவிரவாத கும்பல் செயல்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. எனவேதான், டெல்லி தேசிய புலனாய்வுப்பிரிவு போலீசாரின் 13 தனிப்படையினர் நவ. 27 முதல் மதுரையில் முகாமிட்டு கண்காணிப்பு மற்றும் விசாரணையை வேகப்படுத்தியுள்ளனர். டெல்லி, சென்னை, ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த தேசிய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டிருப்பது இதுதான் முதல்முறை. மூளைச்சலவையால் மதுரை இளைஞர்கள் தீவிரவாத செயலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் கைதானவரும் மதுரையை சேர்ந்த இளைஞர்தான். தீவிரவாத செயல்களுக்கான செலவினங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் மதுரைக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கிறது.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளான இவற்றை மதுரையை மையமாக வைத்து கும்பல் ரூ.25 கோடி வரை இளைஞர்களின் வங்கிக்கணக்குகள் மூலம் புதிய நோட்டுகளாக மாற்றிச் சென்றுள்ளனர். இந்த பணத்தை மாற்றித்தர தீவிரவாதக் கும்பல், 30 சதவீத கமிஷன் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. வங்கிக்கணக்குகள் மூலம் பணம் மாற்றியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்பேரிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தீவிரவாத தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவர். இதுதவிர கைதான அப்பாஸ் அலி மற்றும் 2 பேரிடமும் அல்கொய்தா தொடர்புடன், பிரதமர் உள்ளிட்ட 22 முக்கிய தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருப்பது குறித்த விசாரணையை வேகப்படுத்தியுள்ளோம். விசாரணை முடிவில், மிகப்பெரிய சதித்திட்டம் குறித்த விபரங்கள் வெளிவரும். இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
தொடர் உயிர்பலி வாங்கும் ஆன்லைன் ரம்மி... மணப்பாறை அருகே கடன் தொல்லை தாங்காமல் இளைஞர் தற்கொலை!
கடலூர் கிழக்கு ராமாபுரம் பகுதியில் தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு..!!
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது !!
கீழடி அருகே திருப்புவனம் பகுதியில் பழங்கால உறைகிணறு கண்டுபிடிப்பு
பாஜவில் இருந்து விலகி பேரூராட்சி தலைவி திமுகவில் இணைந்தார்
பெரியாறு அணையில் 10 மாதத்துக்கு பின் இன்று ஆய்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி