SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜாகிர் நாயக் மீது வழக்கு: 10 இடங்களில் சோதனை: என்.ஐ.ஏ நடவடிக்கை

2016-11-20@ 00:02:37

புதுடெல்லி:மும்பையில் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை(ஐஆர்எப்) நடத்தி வந்தவர் மதபோதகர் ஜாகிர் நாயக். இவர் தனது அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதிகளை எல்லாம் ‘பீஸ் டிவி’ என்ற சேனலுக்கு வழங்கி தனது பேச்சுக்களை ஒளிபரப்பச் செய்தார்.  இவரது பேச்சுக்கள் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததால், அதை ஒளிபரப்ப  இங்கிலாந்து, கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டது.வங்கதேசத்தின் தாகா நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவன், ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டு தீவிரவாதப் பாதைக்கு வந்ததாக சமூக இணையதளத்தில் தெரிவித்திருந்தான். இதையடுத்து ஐஆர்எப் தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அமைச்சரவை அறிவித்தது. மகாராஷ்டிரா போலீசாரும் ஜாகிர் நாயக் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்தனர்.

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, வெளிநாடு சென்ற ஜாகிர் நாயக் நாடு திரும்பவில்லை. இந்நிலையில் தேசிய புலனாய்வு (என்ஐஏ) அமைப்பும் வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து ஐஆர்எப்க்கு சொந்தமான 10 இடங்களில் என்.ஐ.ஏ நேற்று சோதனை நடத்தியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்