டிவி நிகழ்ச்சியில் ஆண்களை மோசமாக திட்டுவதாக புகார் : நடிகை ஊர்வசிக்கு ஆணையம் நோட்டீஸ்
2016-11-18@ 00:32:51

திருவனந்தபுரம்: மலையாள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோசமான வார்த்தைகளால் திட்டியதாக எழுந்த புகாரின் பேரில் பிரபல நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையாக விளங்கியவர் ஊர்வசி. ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சியில் குடும்ப பிரச்னைகளை அலசும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஊர்வசி கேட்டு, அதை தீர்க்க முயற்சிப்பது வழக்கம். இந்த நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவர் மனித உரிமை ஆணையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் கடந்த சில தினங்களுக்கு முன் ஊர்வசி பங்கேற்று நடத்தும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண் ேடன்.
அப்போது ஊர்வசி என்னை மிக மோசமான வார்த்தைகளால் திட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆண்களிடம் அவர் மிக மோசமாக நடந்து கொள்கிறார். எனவே இது தொடர்பாக நடிகை ஊர்வசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது சம்பந்தமாக மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மோகன்தாஸ் விசாரித்தார்.
அதைத் ெதாடர்ந்து நடிகை ஊர்வசி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்ட ஆலோசகர்கள் ஆகியோர் இது சம்மந்தமாக ஒரு மாதத்திற்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
டெல்லியில் 1 கோடியை கடந்தது பரிசோதனை..! கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றி அடைந்துள்ளோம்: முதல்வர் கெஜ்ரிவால்
மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை மேலும் ஒருவாரம் நீட்டிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு..!!
இந்தியாவில் 2-ம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் போது மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக தகவல்?
சட்டவிரோத கட்டுமான வழக்கில் நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி.: மும்பை ஐகோர்ட் உத்தரவு
கொரோனா இருக்கிறதா? இல்லையா!: சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் சசிகலா..!!
ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறதா பாஜக!: காவல்துறையால் தேடப்படும் புதுச்சேரி பெண் தாதா எழிலரசி பா.ஜ.க-வில் இணைந்தார்..!!
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்