ஜனார்த்தனரெட்டி வீட்டு திருமண நிகழ்ச்சியில் சினேகா, மீனா, ராதிகா நடனமாடி அசத்தல்
2016-11-12@ 00:36:41

பெங்களூரு: முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி மகளின் நலுங்கு சடங்கில் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நடனமாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி மகளின் திருமணம் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளார். மேலும், இவர் பிறந்த பின்னரே நான் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு முன்னேற்றம் அடைந்தேன்.
எனவே, தனது மகளின் திருமணத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக செய்யவேண்டும் என்ற முடிவுக்கு ஜனார்த்தனரெட்டி வந்துள்ளார். திருமண அழைப்பிதழே கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டதாகும். அதாவது ஆடியோ வீடியோ மூலம் அனைவரையும் வரவேற்பது போன்ற திருமண அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜனார்த்தனரெட்டியின் மகளுக்கு நலுங்கு சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சடங்கில் நடனமாடுவதற்காக 40க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள் இசையுடன் சிடி தயாரிக்கப்பட்டிருந்தது. அதில், மணமகளை வாழ்த்துவது போன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டதும், தமிழ் நடிககைகளான சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் நடனம் ஆடி அனைவரையும் ஆச்சர்யபடவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைக்கு தடை கோரி வழக்கு
ராமர் கோயில் கட்ட நன்கொடை தராததால் ஆசிரியர் பணிநீக்கம்: ஆர்எஸ்எஸ் பள்ளி அதிரடி
சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் தயாரித்த கைவினைப் பொருட்களை வாங்கிய பிரதமர்
பலாத்கார வழக்கில் நீதிமன்றத்தின் கருத்து தவறாக சித்தரிப்பு பெண்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறோம்: உச்சநீதிமன்றம் கருத்து
மகளிர் தினத்தையொட்டி பெண்கள் தலைமையில் விவசாயிகள் போராட்டம்
பாட்லா ஹவுஸ் வழக்கில் அரீஜ் கான் குற்றவாளி: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்