SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைக்கு தாய்ப்பாலை தடுத்த தந்தை, மந்திரவாதி கைது

2016-11-06@ 01:09:59

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர் (28). இவரது மனைவி ஹப்சத் (21). கர்ப்பிணியான ஹப்சத்தை பிரசவத்திற்காக முக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 2 நாட்களுக்கு முன் காலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு உடனடியாக தாய்ப்பால் கொடுக்கும் படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் குழந்தைக்கு 5 நேர தொழுகை கழிந்த பின்னரே தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று குழந்தையின் தந்தை அபுபக்கர் கூறினார்.

டாக்டர்கள் பல முறை கூறியும் தாய்ப்பால் கொடுக்க அபுபக்கர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் பிரசாந்த், தாமரச்சேரி டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார்.  இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து மருத்துவமனை நர்ஸ் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் குழந்தையின் பெற்றோர் அபுபக்கர், ஹப்சத் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் குழந்தையின் தந்தை அபுபக்கரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அபுபக்கர், அப்பகுதியை சேர்ந்த ஐதூருஸ் என்ற மந்திரவாதி கூறியதால்தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவிடாமல் தடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து முக்கம் போலீசார் அபுபக்கர் மற்றும் மந்திரவாதி ஐதூருஸை கைது செய்தனர்.

how do abortion pill work cost for an abortion misoprostol abortion
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்