SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

2015-ல் சூரியனில் இருந்து வெளியான காந்தப்புயல் : கதிர்வீச்சு அதிகரித்தால் டிரான்ஸ்பார்மர்களுக்கு ஆபத்து?

2016-11-05@ 12:32:13

உதகை: கடந்த ஆண்டு சூரியனில் இருந்து வெளிப்பட்ட காந்த புயல் பூமியின் காந்த மண்டலத்தை வலுவிழக்க செய்தாலும் பூமிக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல் பகுதியில் காஸ்மிக் கதிர்கள் ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 60 ஆண்டுகளாக காஸ்மிக் கதிர்வீச்சு பற்றி ஆராய ரேடியோ சமிக்கை தொலைநோக்கி ஆய்வகமும் இயங்கி வருகிறது. மத்திய அனுசக்தி ஆய்வு கழகத்தின் கீழ் இயங்கும் இங்கு காஸ்மிக் கதிர்கள் ஆய்வு மையத்தில் 400 ரியாக்டர்கள் பொருத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் 21-ம் தேதி அன்று சூரியனில் இருந்து உமிழப்பட்ட காந்தப்புயலானது ஒரு நொடிக்கு 1,300 கி.மீ. வேகத்தில் 40 மணி நேரம் கழித்து ஜுன் 22-ம் தேதி பூமியின் காந்த மண்டலத்தை தாங்கியது. அப்போது 60 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றளவில் பரவி கிடக்கும் காந்த மண்டலம் 2 மணி நேரம் வலுவிழந்தது. இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் மேற்கு அமெரிக்காவில் உள்ள ரேடியோ அலைகள் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2 மணி நேரம் நீடித்த இந்த நிகழ்வு நீங்கிய பின்னர் புமியின் காந்த மண்டலம் தன் பழைய நிலைக்கு திரும்பியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் காந்தபுலத்தில் வெடிப்பு ஏற்படும் பட்சத்தில் காஸ்மிக் கதிர்வீச்சு அதிகரித்தால் பூமியில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர்கள் வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

மின் உற்பத்தி நிலையங்களும் வெடித்து அழிவை ஏற்படுத்டுவதோடு செயற்கோள்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் பலத்த சேதம் அடையும் என்ற அச்சம் நிலவுகிறது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் காஸ்மிக் கதிர் வீச்சு குறித்து ஆய்வு நடத்தப்பட்டாலும் பூமியின் காந்தபுலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளை உதகை காஸ்மிக் கதிர்கள் ஆய்வு மையம் மட்டுமே பதிவு செய்துள்ளது. இதனை மற்ற நாடுகளில் உள்ள ஆய்வு மையங்களுக்கு உதகை மையம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்