SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ் மொழியை தேசிய பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் : ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்

2016-10-21@ 12:38:58

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் கணிசமாக வாழும் வெட்வோர்த்வில்லே பகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஹக் மெக்டோர்மோட். இவர் ஆஸ்திரேலிய கல்வி அமைச்சரிடம் எழுத்துப் பூர்வ கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதில் சர்வதேசத்தில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் உலகின் தொன்மையான தமிழ் மொழியை நமது நாட்டின் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், தமிழானது வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், வெட்வோர்த்வில்லேவில் உள்ள தமிழ் படிக்கும் மையத்தில் வார இறுதியில் சுமார் 650 மாணவர்கள் படித்து வருகின்றனர். கிர்ராவீன் பள்ளியில் வைத்து இந்த பாட வகுப்புகள் வாரந்தோறும் நடைபெற்று வருவதாகவும் உரையாற்றியுள்ளார்.

மேலும் தமிழகம், பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு மாநிலம். சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கு, தமிழ் மொழி அவசியம். காமன்வெல்த் அரசுகள், மாகாணங்கள், இதற்கான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் தனது உரையில் வலியுறுத்தியிருந்தார். ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு தமிழ் கற்று கொடுப்பதன் மூலம், தமிழர்களின் நீண்ட பெரும் பண்பாட்டையும், கலாசாரத்தையும் அனுபவிக்க முடியும். தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல, அது ஒரு சிறப்பானதொரு கலாசாரம் என்றும், ஹக் மெக்டோர்மோட் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். தமிழின் அருமையை உணர்ந்த ஆஸ்திரேலியரான ஹக் மெக்டோர்மோட், எப்படியாவது தேசிய பாடத்திட்டத்தில் தமிழை சேர்த்துவிட வேண்டும் என தொடர்ந்து முயற்சிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

how do abortion pill work pristineschool.com misoprostol abortion
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்