தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்
2016-10-12@ 00:24:20

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் புதிதாக 21 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி 29வது மாநிலமாக தெலங்கானா உருவானது. 10 மாவட்டங்களை கொண்டிருந்த தெலங்கானாவில் தற்போது புதிதாக 21 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெலங்கானா மாநிலத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி புதிய மாவட்டமான சித்திபேட்டையை முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விஜயதசமி கொண்டாடப்படும் நாளில் செயல்பட துவங்கியுள்ளது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 21 மாவட்டங்கள், சித்திபேட்டை, ஜன்கோன், ஜெயசங்கர், ஜக்டியால், வாராங்கல், யதாத்ரி, பெடப்பள்ளி, காமாரெட்டி, மேடக், மஞ்செரியல், விகராபாத், ராஜன்னா, ஆசிபாபாத், சூர்யாபேட்டை, கோதகுடேம், நிர்மல், வனபார்த்தி, நாகர்கர்னுூல், மகபூபாபாத், ஜோகுலம்பா மற்றும் மெட்சா ஆகும்.
மேலும் செய்திகள்
ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதில் பாரபட்சம் குஜராத்துக்கு 1200 மெட்ரிக் டன் ராஜஸ்தானுக்கு 124 மெட்ரிக் டன்: மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
ரூ.300 டிக்கெட்டில் 90 நாட்களுக்குள் ஏழுமலையானை தரிசிக்கலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை நாடாளுமன்ற அவசர கூட்டத்தைக் கூட்டுங்கள்
மோடி பதவி விலக கோரி ஹேஷ்டேக்: டிரெண்டிங்கில் நம்பர் 1
கொரோனா வைரசுக்கு எதிராக இரட்டை மாஸ்க் தரும் இரட்டிப்பு பாதுகாப்பு: ஆய்வில் தகவல்
மின் வாகன உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெறும்: நிதின் கட்கரி நம்பிக்கை