ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா? கோவையில் பிடிபட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை
2016-10-05@ 01:19:28

கோவை: கோவையில் பிடிபட்ட 5 பேரில், 2 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பது என்.ஐ.ஏ. விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கனகமலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மன்சித் (30), அபுபஷீர் (29), சுவாலிஷ் முகமது (26), சபான் (30), ஜாசிம் (25), ராம்ஷெத் நகீலன் கண்டியல் (24) ஆகிய 6 பேரை தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ) போலீஸ் அதிகாரிகள் கடந்த 1ம் தேதி கைது செய்தனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் ேகாவையில் பதுங்கியிருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து, என்.ஐ.ஏ தென்மாநில ஐ.ஜி அலோக், சூப்பிரண்டு விக்ரம் தலைமையிலான அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தனர். உள்ளூர் போலீசார் உதவியுடன் கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த ஐந்து பேரை பிடித்தனர். இவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட ஐந்து பேரையும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து, என்.ஐ.ஏ போலீஸ் அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். நேற்று 3வது நாளாக 5 பேரிடமும் விசாரணை நடத்தினர். 5 பேரில் இரண்டு பேர், கோழிக்கோட்டில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் பேஸ்புக் பக்கத்தின் சாட் (தகவல் பரிமாறும் தனிப்பட்ட பிரிவு) மூலம் பல்வேறு தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். மேலும், பரிமாறிக்கொண்ட தகவல்களை உடனுக்குடன் அழித்துள்ளனர்.
இதுகுறித்து என்.ஐ.ஏ போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். பேஸ்புக் பக்கத்தின் சாட் மூலம் என்னென்ன தகவல் பரிமாறப்பட்டது என்பது பற்றி பல கேள்விகளை கேட்டு விசாரித்தனர். கேரளாவில் கைது செய்யப்பட்ட 6 பேரில், அபுபஷீர் என்பவர் ேகாவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தவர் என என்.ஐ.ஏ போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த இரு நாட்களாக விசாரணை முடிந்ததும், மாலையில் ஐந்து பேரையும் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், நேற்று தொடங்கிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் செய்திகள்
வெம்பக்கோட்டையில் ஆண் உருவம் சுடுமண் பொம்மை கண்டெடுப்பு
சேலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து துப்பாக்கி தயாரித்த வழக்கு சென்னை கோர்ட்டுக்கு மாற்றம்
புதுச்சேரி சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
வானூர் அருகே திமுக நிர்வாகி வெட்டிக்கொலை: 3 பேர் கைது 4 பேருக்கு வலை
ஊட்டி அருகே சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி பலி
நாகை மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!