SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெண்மை புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் காலமானார

2012-09-10@ 03:37:38

ஆனந்த்: இந்தியாவில் பால் உற்பத்தி அதிகரிக்க காரணமான வெண்மை புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் 90வது வயதில் நேற்று காலமானார். அவர் மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.தேசிய பால் மேம்பாட்டு வாரிய நிறுவன தலைவர் வர்கீஸ் குரியன் குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் நேற்று அதிகாலை காலமானார். 90 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். நேற்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. நேற்று மாலை இறுதி சடங்குகள் நடந்தன. அவரது மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1921ம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்த வர்கீஸ் குரியன் சென்னை லயோலா கல்லூரியில் அறிவியல் பட்டமும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் பட்டமும் பெற்றவர். பின்னர் அமெரிக்காவில் எம்.இ பட்டம் பெற்றார். உலகிலேயே அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுவதற்கு காரணம் குரியன். குஜராத்தின் ஆனந்த் நகரில் அவர் தொடங்கிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களால் பால் உற்பத்தி அதிகரித்தது. பால் பொருட்கள் அமுல் என்ற வணிக முத்திரையோடு பிரபலமானது. இதையடுத்து, அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தொடங்கிய, தேசிய பால் மேம்பாட்டு வாரியத்தின் தலைவரானார் குரியன். இதை தொடர்ந்து பால் உற்பத்தி பல மடங்கு அதிகரித்ததால், வெண்மை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டார். அவருக்கு மனைவி மோலி, மகள் நிர்மலா உள்ளனர்.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்