SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது

2016-09-24@ 00:47:51

சென்னை: போலி கையெழுத்திட்டு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை எம்.ஆர்.சி.நகர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர் மோகன் என்பவர் கடந்த 17ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.அதில், “எங்கள் வங்கி கிளையில் பெண் சிறப்பு உதவியாளராக பணியாற்றி வரும் ராஜி பசந்த் ராவ் (54) என்பவர், வாடிக்கையாளர் செயின்ட் தாமஸ் கேத்திரில் பசிலிகா என்பவரின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமலேயே வாடிக்கையாளரின் கையெழுத்தை தானே போலியாக போட்டு நிரந்தர வைப்பு வங்கி கணக்கில் இருந்து 2.43 கோடி அபகரித்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் சாந்தோமை சேர்ந்த  வங்கி பெண் உதவியாளர் ராஜி பசந்த் ராவ் விடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜி பசந்த் ராவு பி.எஸ்சி வரை படித்துள்ளார். அவரது கணவர் எஸ்பிஐ வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ராஜி பசந்த் ராவ் கடந்த 2008ம் ஆண்டு முதல் எம்.ஆர்.சி.நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் பெண் சிறப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அதே வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கு வைத்துள்ள செயின்ட் தாமஸ் கேத்திரில் பசிலிகாவின் கணக்கில் உள்ள தொகையை அவருடையே விண்ணப்பத்தில் இடைச்சொருகல் செய்து நடப்பு கணக்குகள் ஆரம்பித்துள்ளார்.

 பின்னர், அந்த வைப்பு தொகையை முன் கூட்டியே முடித்து ₹2.43 கோடியை நடப்பு கணக்கிற்கு கடந்த 2014ம் ஆண்டே மாற்றியுள்ளது தெரியவந்தது.  இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ராஜி பசந்த் ராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்