கடலோர மாவட்ட கடற்பகுதிகளில் கடற்பாசி பயிரிடும் திட்டம் : ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
2016-09-22@ 00:20:01

சென்னை: தமிழ்நாட்டின் கடல் பகுதிகளில் கடற்பாசிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த கடற்பாசிகளில் இருந்து தயாரிக்கப்படும் “கராகீனன்” என்பது ஒரு வகையான மாவுப்பொருள் ஆகும். உணவு, ரசாயனம், மருந்து மற்றும் அழகு சாதன தயாரிப்பு பொருட்களிலும், ஐஸ்கிரீம் மற்றும் பற்பசை தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. விவசாய பயிர்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் கடற்பாசியில் இருப்பதால், இதனை விவசாயிகள் இயற்கை உரமாகவும் பயன்படுத்துகின்றனர். இதன் உற்பத்தி இந்தியாவில் குறைவாக இருப்பதால், ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1500 டன் “கராகீனன்” வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் கடற்பாசி உற்பத்தியை பெருக்குவதற்காக தமிழ்நாட்டின் கடலோர மாவட்ட கடற்பகுதிகளில் ஆழம் குறைந்த பகுதிகளில் கடற்பாசி பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் மீனவ மகளிர் குழுக்களின் மூலம் ஒப்பந்த முறையில் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
மீனவ மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்ட கடற்பகுதிகளில் கடற்பாசி பயிரிடும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்து, தூத்துக்குடி மாவட்டம், புன்னகாயல் கிராமத்தை சேர்ந்த ஒவ்வொரு மீனவ மகளிர் அம்மா குழுக்களுக்கும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வீதத்தில் 5 மீனவ மகளிர் அம்மா குழுக்களுக்கு ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவிக்கான ஆணைகளை வழங்கினார்.
மேலும் செய்திகள்
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கு போதுமானதல்ல : ராமதாஸ் வேண்டுகோள்
கோவில்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?: வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மதத் தலைவர்களுடன் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை..!!
அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள், தேர்வுகள் : தமிழக அரசு அதிரடி!!
இரவு நேர பொது ஊரடங்கு ரயில்களுக்கு பொருந்தாது; திட்டமிட்டப்படி ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் வடமாநில தொழிலாளர்கள்
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்