SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘எங்க பொண்டாட்டிக்கு 7 புருஷன்க சார்...’ போலீசில் 1, 2, 7 கணவர்கள் புகார்

2016-09-21@ 01:05:26

பெங்களூரு: மருதமலை தமிழ் பட காமெடி போன்று பெங்களூருவில் 7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட  கல்யாண ராணியை கே.ஜி  ஹள்ளி போலீசார் கைது செய்தனர். பெங்களூரு கே.ஜி ஹள்ளியை அடுத்த சாராய்பாளையாவைச் சேர்ந்தவர் இம்ரான். சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.  இவரது  மனைவி யாஸ்மீன் பானு (38). 8 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  கணவரின் சொத்தின் மீது ஆசைப்பட்ட யாஸ்மீன் அவரிடமிருந்து பல லட்சம் பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பணத்துடன் கணவரைவிட்டு  பிரிந்தார். அதன் பின் பல தொழிலதிபர்களை ஏமாற்றி வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டார்.

 இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் சமீபத்தில், யாஸ்மீன் தனது முதல் கணவரான இம்ரான் என்பவரை செல்போனில் தொடர்புக் கொண்டார். அப்போது  யாஸ்மீன் அவரிடம் சில போட்டோ ஆதாரங்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது.  அவரது பிளாக் மெயிலுக்கு செவி சாய்க்காத, இம்ரான்  தனது மனைவியின் திருட்டு தனத்தை வெளியே கொண்டுவர போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சமீபத்தில் கே.ஜி ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்ற   அவர், தனது மனைவி ஒரு கல்யாண ராணி என புகார் அளித்தார்.

 அதில் அவர் கூறியுள்ளதாவது: என் மனைவி யாஸ்மீன் என்னை திருமணம் செய்துவிட்டு, பின்னர் வேறுவொருவரை திருமணம் செய்தார். அப்போது என்னிடம் அவர்  பல லட்சம் பிளாக் ெமயில் செய்து பெற்றார். அவரது மிரட்டலுக்கு பயந்து பணம் கொடுத்தேன். அதன் பின் எனக்கு பிரச்னை இல்லை. ஆனால் அவர்  ஒவ்வொருவரையாக திருமணம் செய்து ஏமாற்றி வந்த தகவல் மட்டும் கிடைத்தது. எனக்கு பின்னர் அப்சல் என்பவரை திருமணம் செய்தார். அவரை பிளாக் மெயில்  செய்து பணம் பறித்த பின்னர், 3வதாக சையத் சேக் என்பவரையும், 4வதாக ஈராஜ், 5வதாக ஆசீப், 6வதாக சோயப் என 7 பேரை அடுத்தடுத்து திருமணம் செய்தார்.  அவர்களிடம் என்னை போன்று சில ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.  

கல்யாண ராணியான எனது மனைவியை போலீசார் கைது செய்ய வேண்டும்்இவ்வாறு புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து யாஸ்மீனிடம் ஏமாந்த சோயப்  மற்றும் அப்சல் என்பவர்கள் அடுத்தடுத்து புகார் அளித்தனர். 3 பேரின் புகாரை ஏற்ற போலீசார் கல்யாண ராணி யாஸ்மீனை கைது செய்தனர். அவர் மீது மோசடி,  பிளாக் மெயில், மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றததில் ஆஜர்படுத்தினர். போலீஸ் காவலில் வைத்து அவரை விசாரிக்க நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்