SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறுக்க தெரியாத அதிகாரிகளால் அரைகுறையானது அண்ணா ஆர்ச

2012-09-07@ 01:37:54

சென்னை : அண்ணா ஆர்ச் அகற்றும் பிரச்னையில் அதிகாரிகளின் சொதப்பலால், பொதுமக்கள் மிகவும் பீதியுடனேயே அந்த வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அண்ணாநகர் ஆர்ச் அருகே புதிய மேம்பாலம் ரூ.117 கோடி செலவில் கட்டப்படுகிறது. மேம்பாலத்தி ற்கு இடையூறான அண்ணா பவள விழா வளைவு  (அண்ணா ஆர்ச்) இடிக்க நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர்.

கடந்த 1ம் தேதி இரவு அண்ணா வளைவை இடிக்கும் பணி தொடங்கியது. அண்ணா வளைவுகள் அறுக்கப்பட்டு, ராட்சத கிரேன் மூலம் அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால்  4 நாட்கள் ஆகியும் அண்ணா வளைவை அறுத்து எடுக்க முடியாமல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குழு திணறியது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, “அண்ணா வளைவு அகற்றப்படாது, புதிதாக கட்டப்பட உள்ள மேம்பாலம் கிழக்கு பக்கம் இடம் மாற்றி அமைக்கப் படும்“ என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா வளைவு பகுதியை அப்புறப்படுத்தும் பணி 75 சதவீதம் முடிந்த நிலையில், தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக வளைவு ஒரு பக்கமாக சாய்ந்து விழுந்து வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தற்போது கிரேன் உதவியுடன் அண்ணா வளைவு தாங்கி பிடிக்கப்பட்டுள் ளது. அறுக்கப்பட்ட பகுதிகளை சரி செய்யும் வரை அண்ணா வளைவை கிரேன் உதவியுடன் தாங்கி பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “அண்ணா ஆர்ச் எதிர்பார்த்ததைவிட அதிக உறுதியாக இருந்தது. அப்படியே அறுத்து எடுத்தால் பாதுகாப்பாக தூக்கி சென்று வேறு இடத்தில் வைப்பது என்பது எளிதான காரியம் இல்லை. காரணம் அண்ணாநகர் பகுதி முழுவதும் மின்கம்பம், மரங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இரண்டு கிரேன் கொண்டு தூக்கி செல்லும்போது வளைவு உடைந்தால் பல உயர் அதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும். ஒருவேளை கிரேன் சரிந்து விழும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஏற்பட்டால் பலகோடி நஷ்டம் ஏற்படும். அதனால்தான் வளைவை அகற்றாமல் புதிய இடத்தில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அண்ணா வளைவின் கிழக்கு பக்கம் உள்ள சித்தா மருத்துவமனை வளாகத்தில் உள்ள சில மரங்கள் மற்றும் கட்டிடங்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் மேம்பாலம் செல்லும் வகையில் இடம் தேர்வு செய்யப்படும்“ என்றார். “நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கே மேம்பாலம் பணி நிறுத்தப்பட்டதற்கு முழு காரணம். திட்டமிட்டபடி ஒரே நாளில் ஆர்ச் பகுதியை அகற்றி இருந்தால் இவ்வளவு பிரச்னை ஏற்பட்டிருக்காது. மேலும் மேம்பாலம் பணியில் திட்டமிட்டபடி விரைவாக முடிந் திருக்கும். தற்போது அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள், மரங்களை அகற்றுவது மட்டும் எந்த வகையில் நியாயம்?’’ என்று பொதுமக்கள் குமுறினர்.        

செலவுக்கு மேல் செலவு

கடந்த 1986ம் ஆண்டு ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்து 500 செலவில் இந்த வளைவு அமைக்கப்பட்டது. தற்போது மேம்பாலம் பணிக்காக அண்ணா வளைவை அகற்ற 8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டு, இடிக்கப்பட்ட பகுதியை சரி செய்ய செலவு செய்யப்பட உள்ளது. அதேபோன்று மாற்றுபாதையில் மேம்பாலம் செல்வதால் அதற்கும் கூடுதல் நிதி தேவைப்படும். இதுபோன்று அடுத்தடுத்த முடிவுகளால், இன்னும் பல கோடி செலவு ஆகும் என்று கூறப்படுகிறது.

sms spy app click spy apps free
plavix plavix plavix plm

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

 • korona-death19

  கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

 • tn-school19

  தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

 • jesee_chrrr1

  3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

 • 19-01-2021

  19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்