SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘தலையை வெட்டி வீசுவோம்’ காதல் ஜோடிக்கு மிரட்டல்

2016-08-26@ 18:21:35

திருச்சி: திருச்சி ஏர்போர்ட் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜமால் மொய்தீன். இவரது மகள் ரஜபுனிசாபேகம்(20). டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். ஏர்போர்ட் ஸ்டார் நகரை சேர்ந்த அலாவுதீன் மகன் அசன் (23) என்பவரை காதலித்து வருகிறார்.

காதல் விவகாரம் ரஜபுனிசாபேகம் பெற்றோருக்கு தெரியவந்ததால், காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். ரஜபுனிசா பேகம் அளித்த மனுவில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ெதரிவித்து என்னை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்தனர். உறவினருக்கு என்னை திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். தந்தைக்கு உதவியாக வடிவேல் என்பவர் செயல்படுகிறார்.

அவர் என்னிடம் ஒழுங்காக அவனை மறந்துவிடு. இல்லை என்றால் உன் காதலனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இவர்களிடம் இருந்து தப்பிக்க, நீங்கள் கூறுபவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் கல்லூரி வந்தேன். அங்கிருந்து கடந்த 24ம் தேதி காதலனுடன் வெளியேறினேன். இதையடுத்து காதலரை செல்போனில் தொடர்பு கொண்ட பெற்றோர் மற்றும் வடிவேல் தலைமையிலான ரவுடி கும்பல் எங்கள் 2 பேரின் தலையை வெட்டி ரோட்டில் வீசுவதாக மிரட்டுகின்றனர்.

இதுகுறித்து விசாரித்து எனது பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நுண்ணறிவு பிரிவு உதவிகமிஷனர் கபிலன் விசாரணை நடத்தி வருகின்றார். கமிஷனர் அலுவலகம் முன் ரஜபுனிஷாபேகத்தின் பெற்றோர், உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்