SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதிக்கப்பட்டவர்கள் ஆவேசம் கருணை மனு அனுப்ப வாய்ப்பு தர கூடாத

2012-08-30@ 04:55:50

மும்பை: மும்பை தாக்குதலில் பாதித்தவர்கள், தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். அவர்கள் கூறிய கருத்து:சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய தாக்குதலில் பலியான ரயில்வே டிக்கெட் ஆய்வாளர் சுசில்குமார் சர்மாவின் மனைவி ராகினி சர்மா கூறுகையில், ‘‘‘மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் கணவர் உயிருடன் திரும்பி வரப் போவதில்லை. அதே நேரம், கொடூர தாக்குதல் நடத்திய குற்றவாளி தண்டிக்கப்படுவது அவருடைய ஆத்மாவுக்கு சாந்தி அளிக்கும். ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்ப கசாபுக்கு வாய்ப்பு அளிக்க கூடாது. அவனை ஒரு மாதத்துக்குள் தூக்கில் போட வேண்டும்‘‘ என்றார்.


தனது தம்பியை பறிகொடுத்த முகமது ஹனீப் (69) கூறுகையில், ‘‘நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி விட்ட போதிலும், கசாப் தூக்கிலிடப்படுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்‘‘ என்றார். தாக்குதலில் உயிரிழந்த உதவி சப்,இன்ஸ்பெக்டர் பாலா சாகேப் போன்ஸ்லேயின் மகன் சச்சின் போன்ஸ்லே கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. என் தந்தையின் உயிர் தியாகம் வீணாகவில்லை என்று நினைக்கிறேன். கசாப் மீண்டும் அப்பீல் செய்வதற்கு வாய்ப்பளிக்காமல் மரண தண்டனையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்‘‘ என்றார்.பிரபல கட்டுரையாளர் பீஷம் மன்சுக்கானி கூறுகையில், ‘‘கசாபை தூக்கில் போடும் விஷயத்தில் தொடர்ந்து இழுபறி ஏற்படப் போவது நிச்சயம்’’ என்கிறார்.



‘எங்களிடம் கொடுங்கள்
கவனித்து கொள்கிறோம்’

மும்பை தாக்குதலில் உயிரிழந்த உதவி சப்,இன்ஸ்பெக்டர் பாலாசாகேப் போன்ஸ்லேயின் மகன் சச்சின் போன்ஸ்லே கூறியதாவது;கசாபை தூக்கிலிடுவதற்கு பதிலாக, அவனை, மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். என்னை போன்ற பாதிக்கப்பட்டவர்களிடம் கசாபை ஒப்படையுங்கள், அவனை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். தாக்குதலில் என்னை போன்ற தாங்கள் பெரிதும் நேசித்தவர்களை இழந்தவர்கள், கசாபுக்கு தகுந்த பாடம் கற்பிக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christmas-30

    நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

  • la-palma-29

    ஆறாக ஓடும் தீக்குழம்பு...நகரையே சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் லா பால்மா...!!

  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்