SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக எம்எல்ஏ ஆங்கில பேச்சு கருணாஸ் விமர்சனம்; கடும் அமளி

2016-07-28@ 01:04:22

திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கில பேச்சை அதிமுக உறுப்பினர் கருணாஸ் விமர்சித்ததால் சபையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. திருத்த நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அதிமுக உறுப்பினர் கருணாஸ்(திருவாடனை) சட்டப்பேரவையில் நேற்று பேசியதாவது: தமிழ்வளர்த்த மதுரை தொகுதியைச் சேர்ந்தவர் தனக்கு தமிழ் தெரியாது ஆங்கிலத்தில் பேசுகிறேன் என கூறி ஆங்கிலத்திலேயே பேசினார். ஆங்கிலத்தில் பேசியதால் அமைச்சர்களின் குறுக்கீடு இல்லாமல் இருந்தது, இனி நாமும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என  சில திமுகவினர் பேசிக் கொண்டது என் காதுகளுக்கு எட்டியது என்றார். அப்போது கருணாஸ் பேச்சுக்கு  திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. சபாநாயகர் அமைதி படுத்த முயன்றும் திமுக உறுப்பினர்கள் அமைதியாகாததால், கருணாஸ் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை கருத்து தெரிவிக்க சபாநாயகர் அனுமதித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: உறுப்பினர் கருணாஸ் கற்பனையாக எதை எதையோ சபையில் பேசுகிறார். அவர் கற்பனையாக பேசியதை பேரவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். சபாநாயகர் தனபால்: கருணாஸ் பேசியதற்கு நீங்கள் கருத்து தெரிவித்துள்ளீர்கள். இருவர் பேசியதும் பேரவை குறிப்பில் இடம் பெறும் என்றார். அப்போது திமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து மீண்டும் கூச்சல் போட்டனர். அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் தனபால் ‘‘ நீங்கள் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்ததும், சபை குறிப்பில் இடம் பெறும். பிரச்சனையை இத்துடன் விடுங்கள்’’ என்றார். எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: ஒரு உறுப்பினர் ஆங்கிலத்தில் பேச தங்களிடம் அனுமதி கேட்டு பேசும் போது, அதை இன்னொரு உறுப்பினர் விமர்சிக்கக் கூடாது. எனவே, கருணாஸ் பேசியதை பேரவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். சபாநாயகர் தனபால்: கருணாஸ் பேசியது ஒன்றும் சபையில் பேசக்கூடாத வார்த்தை இல்லை. நீக்க வேண்டிய வார்த்தை என்றால் நீக்கி விடுவேன்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: சபையில் ஒரு உறுப்பினர் இன்னொரு உறுப்பினரின் பெயரை சொல்லி குற்றம்சாட்டுவது மரபல்ல. உறுப்பினர் தனக்கு சரளமாக தமிழ் பேச வராது என்பதை சொல்லித்தான் தனது ஆங்கில பேச்சை தொடர்ந்தார். அதை கொச்சைப்படுத்தி கருணாஸ் பேசியுள்ளார். காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் தெலுங்கில் சபையில் பேசியபோது,  முதல்வர் ஜெயலலிதா தெலுங்கிலேயே பதில் அளித்தார். முதல்வரின் பேச்சை கொச்சைப் படுத்தி பேசலாமா? பேரவை விதி 14ல் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ பேசலாம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. துரைமுருகன்: புது உறுப்பினர் என்பதால் இன்னொரு உறுப்பினரை காயப்படுத்தி பேசக்கூடாது. சபாநாயகர் தனபால்: தியாகராஜன் விளக்கம் சொல்லலாம். தியாகராஜன்: எங்கள் குடும்பம் நீதிக்கட்சியில் தொடங்கி பாரம்பரியம் மிக்கது. எனது தாத்தா தான் மதுரை தமிழ் சங்கத்தையும், திருவள்ளுவர் கழகத்தையும் தொடங்கி நிதி கொடுத்து, பல வகையிலும் தமிழை வளர்த்துவந்தார்.

அதை நாங்கள் இன்னும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.  நான் பேசும் போதே நான் அரசியல் பேச இங்கு வரவில்லை, பட்ஜெட்மீது தான் பேச வந்துள்ளேன். நான் படித்தது முழுக்க ஆங்கிலத்தில், அதனால் பட்ஜெட்டில் உள்ள சில ஆங்கில வார்த்தைகளை தமிழில்  சொல்வது என்பது எனக்கு சிரமமானது என்பதால், என்னுடைய ஆங்கில பேச்சு முதல்வருக்கு நன்கு புரியும் என்பதால் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன் என்று கூறி விட்டுதான் பேசினேன்.  என்னால் தமிழில் விளக்க முடிந்தவற்றை பேச்சின் போது அவ்வப்போது தமிழிலும் விளக்கி பேசினேன். கருணாசுக்கு புரியும்படி பேசுவதென்றால், எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை, நிதி நிலை அறிக்கையை அவரது அரசியல் அறிவுக்கு எட்டும் அளவுக்கு என்னால் தமிழில் பேசமுடியும். இவ்வாறு விவாதம் நடந்தது.

கருணாஸ் பேச்சு; பேரவையில் சிரிப்பு

உறுப்பினர் கருணாஸ் பேசியபோது, 1962ம் ஆண்டு முதல்வராக இருந்த அண்ணா லாட்டரி சீட்டை அறிமுகம் செய்தபோது ‘‘விழுந்தால் வீட்டுக்கு இல்லாவிட்டால் நாட்டுக்கு’’ என்று லாட்டரி மூலம் அரசுக்கு வருவாய்க்கு  வழி செய்தார் என்றார். அப்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர். சிரிப்பலை அடங்க சிறிதுநேரம் பிடித்தது. தொடர்ந்து பேசிய அவர் மீண்டும் 1962ல் முதல்வராக இருந்த அண்ணா மதச்சார்பின்மை பற்றி பேசியபோது ‘‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’’ என்றார். அப்போதும் பேரவையில் சிரிப்பலை எழுந்து அடங்க சிறிதுநேரம் பிடித்தது. 1967ல்தான் அண்ணா முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்