7 பெண்களை மணமுடித்த ‘கல்யாண மன்னன்’ கைது : பெண் உட்பட 3 பேருக்கு வலை
2016-07-25@ 02:00:17

மதுரை: ஏழு பெண்களை மணமுடித்த ‘கல்யாண மன்னன்’ நேற்று கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை கே.புதூர் இ.பி. காலனியை சேர்ந்தவர் சாலமியா பானு (28). இவர் மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவிடம் கொடுத்த மனுவில், ‘மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவி தஸ்லிமாவின் அறிமுகத்தின் பேரில், காதர் பாட்சா என்பவருக்கும், எனக்கும் கடந்த ஜூன் 26ல் திருமணம் நடந்தது. மதுரை அண்ணா நகரில் வசித்தபோது, பீரோவில் இருந்த ரூ.3 லட்சம், 8 பவுன் நகைகள், ஏடிஎம் கார்டுகள், வங்கிக்கணக்கில் இருந்த ரூ.35 ஆயிரத்துடன் காதர்பாட்சா தலைமறைவாகி விட்டார். இவர் என்னை திருமணம் செய்வதற்கு முன்பு சென்னையை சேர்ந்த நிர்மலா, திண்டுக்கல்லை சேர்ந்த ஜமுனா, வத்தலக்குண்டை சேர்ந்த மகாலட்சுமி உள்பட 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். எனவே, காதர்பாட்சா, தஸ்லிமா, அப்துல்கயூம் மற்றும் அவரது நண்பர் ஜாகீர்உசேன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர்பாட்சாவை போலீசார் நேற்று கைது செய்து மதுரை 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள தஸ்லிமா, அப்துல் கயூம், ஜாகீர் உசேன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவர், காதர்பாட்சா, தன்னிடம் வேலை வாங்கித்தருவதாக ரூ.1.50 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாக மதுரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்
அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை
பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: விமான நிலையத்தில் தப்பியவர் ரயில் நிலையத்தில் சிக்கினார்
டாஸ்மாக் விடுமுறையை பயன்படுத்தி மது விற்ற 2 பேர் கைது: 120பாட்டில்கள் பறிமுதல்
பேருந்து நிலையத்தில் தூங்கிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவர் கைது
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்12 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!