SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் பணி சரிவர செய்யாத தேனி மாவட்ட திமுக செயலாளர் நீக்கம் : கட்சி தலைமை அதிரடி

2016-07-25@ 01:49:00

சென்னை: தேனி மாவட்ட திமுக செயலாளர் எல்.மூக்கையா தலைமைக் கழகத்தால் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து தேர்தல் பணிகளை சரிவர செய்யாத நிர்வாகிகள் மீது திமுக தலைமை கழகம் நடவடிக்கை எடுக்கும் பணியை தொடங்கியது. புகார்கள் அடிப்படையில் பல்வேறு ஒன்றிய, நகர நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு மாவட்ட செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேனி மாவட்ட திமுக செயலாளர் எல்.மூக்கையா அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, எம்.ஜெயக்குமார் தேனி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட தேனி மாவட்ட நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் பணிக்குழு செயலாளர் நியமனம்

திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், “திமுக சட்ட திட்ட விதிப்படி குத்தாலம் பி.கல்யாணம் தலைமைக் கழகத்தால் தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர் இணைந்து பணியாற்றுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

drug coupon card prescription coupons drug discount coupons
sinemet megaedd.com sinemet
plavix tonydyson.co.uk plavix plm
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்