SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகளவில் அதிகபட்ச வெப்பம் குவைத் நாட்டில் பதிவு

2016-07-25@ 01:35:54

குவைத்: குவைத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். உலகளவில் அங்கு அதிகபட்சமாக 129.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.  வளைகுடா நாடுகளில் எப்போதுமே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். கோடைக் காலத்தில் சொல்லவே வேண்டியதில்ைல. ஆனால் இந்த முறை வழக்கத்துக்கும் அதிகமாக குவைத் நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.

 உலக வரலாற்றிலேயே கடந்த வியாழக்கிழமை, குவைத்தில் உள்ள மித்ரிபா பகுதியில் 54 டிகிரி செல்சியஸ் (129.3 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது. வெயிலின் கோர தாக்குதலால், குவைத் மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு, கடந்த 1913ம் ஆண்டு ஜூலை 10ல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 56.7 டிகிரி செல்சியசாக (134.06 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகி இருந்தது. ஆனால் இந்த பதிவின் உண்மைத்தன்மை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதனால், இப்போது குவைத்தில் பதிவாகி உள்ள வெப்பநிலை, உலகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
  • haryana28

    மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

  • water28

    தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

  • biharele28

    கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

  • pakistanbomb27

    பாகிஸ்தானில் மத பாடசாலையில் பயங்கர குண்டு வெடிப்பு!: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி...70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

  • bee27

    6 லட்சத்துக்கும் அதிகமான தேனீக்களை உடலில் சுமந்து சீன இளைஞர் கின்னஸ் சாதனை!: பேஸ்புக்கில் கலக்கும் வித்தியாசமான சாதனை முயற்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்