பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதலில் 75 பேர் பலி: மக்கள் கூட்டத்தில் லாரியை மோத செய்து கொடூரம்
2016-07-15@ 06:14:17

நீஸ்: பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் லாரி வெடித்து சிதறியத்தில் 75 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி நடந்த வான வேடிக்கையை பார்த்துவிட்டு திரும்போது போது லாரி வெடித்துள்ளது.
மக்கள் கூட்டத்தில் வெடிபொருட்கள் அடங்கிய லாரியை மோத செய்து விட்டு ஓட்டுநர் தப்ப முயற்சி செய்துள்ளான். லாரி ஓட்டுநர் சுட்டு கொல்லப்பட்டதாக பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கண்டய்னர் லாரியில் கையெறி குண்டுகளும் பயங்கர ஆயுதங்களும் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற நீஸ் நகர் தீவிரவாத தடுப்பு பிரிவு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இது ஒரு கொடூரமான தாக்குதல் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தது சீன உளவு கப்பல்: 22ம் தேதி வரை முகாமிடும் என அறிவிப்பு
7 தைவான் அதிகாரிகளுக்கு சீனா பொருளாதார தடை
இந்தியாவின் சுதந்திர தினம்; நியூயார்க்கில் ஆடல், பாடலுடன் கொண்டாட்டம்
நில மோசடி வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ.. வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒடிங்கா நூலிழையில் தோல்வி..!!
சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவான் வாங்-5’ இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்தடைந்தது
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!