தமிழ் எண்களுடன் 18ம் நூற்றாண்டு மைல் கல்:புதுகை அருகே கண்டுபிடிப்பு
2016-07-08@ 14:50:39

புதுக்கோட்டை: ஆதனக்கோட்டையில் 18ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எண்களுடன் கூடிய மைல்கல் கண்டறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் தமிழ் ரோமன், அரபு எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை காவல் நிலையம் அருகே தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், ஆய்வுக்குழு உறுப்பினர் ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோரால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மண்ணில் புதைந்து கிடந்த தமிழ் மற்றும் ரோமன் எண்களுடன் கூடிய மைல் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மைல்கல்லின் வரலாற்று பின்னணி குறித்து மாவட்ட தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆசிரியர் மணிகண்டன் கூறியதாவது:
18ம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை ஆதனக்கோட்டை வழியாக சாலை அமைத்து முக்கிய வழியாக பயன்படுத்தப்பட்டது என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. குறிப்பாக மாப்பிள்ளை நாயக்கன்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தமிழ் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள மைல்கல் கல்வெட்டில் ஆதனக்கோட்டை “ய௬” அதாவது 16 மைல் என்றும் தஞ்சை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதனக்கோட்டை “௧௪ “ அதாவது 14 மைல் என்றும் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வருபவர்களுக்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் நடப்பட்டுள்ளது.
இதேபோல் மேட்டுப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட மைல் கல்லிலும் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதனக்கோட்டையின் புறப்பகுதியிலும் மைல்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆதனக்கோட்டையிலிருந்து கூழியான்விடுதி வரை தற்போதுள்ள நெடுஞ்சாலையும் அதனைத்தொடர்ந்து புதுகைக்கு செல்லும் பாதை மேட்டுப்பட்டி வழியாகவே அப்போதைய புதுக்கோட்டைக்கான நெடுஞ்சாலை அமைந்துள்ளதை இந்த மைல்கல் கல்வெட்டு உறுதி
தற்போது நடைமுறையிலுள்ள அரபு எண்கள் புதுகை சமஸ்தானத்திற்குட்பட்ட மைல்கற்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதோடு ரோமன் எண்களையும் தமிழ் எண்களையும் மட்டுமே பயன்படுத்தி இந்த மைல்கல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆங்கிலேயர் காலத்திலேயே தமிழ் எண்கள் அரசு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. தமிழ் எண்கள் சமீப காலமாகத்தான் புழக்கத்திலிருந்து போயிருக்கிறது என்பதையும் தெளிவாக்குகிறது என்றார்.
மேலும் செய்திகள்
2020ல் விடுதி சமையலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு
ஊராட்சி பொது நிதியில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம்: ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தரவு
வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி புகார் போலீஸ் விசாரணையின்போது விஷம் குடித்து கணவன் தற்கொலை: அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்
தற்காலிக ஆசிரியர்கள் நியமன தடையை நீக்க கோரி முறையீடு: 8ம் தேதி விசாரணை
இலங்கை தமிழர்கள் 8 பேர் தனுஷ்கோடி வருகை
நெல்லையில் முதல் குறைதீர் கூட்டம் ஊர்காவல் படையில் திருநங்கைகளுக்கு வேலை: கலெக்டர் தகவல்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!