இந்திய கம்யூ. எம்எல்ஏ மீது வழக்க
2012-08-21@ 00:38:25

கிருஷ்ணகிரி : மதுரையை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிரானைட் மோசடி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக, கொலை வழக்கில் சிறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன் மீது 4 வழக்குகளும், அவரது மனைவி மீது 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலைகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு வைரம் எனப்படும் கிரானைட் கற்கள் ஏராளமாக உள்ளன. அரசு நிறுவனமான டாமின் சார்பில் 4 குவாரிகள், 119 தனியார் நிறுவன குவாரிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. கிரானைட் கற்கள் பலகைகளாக மாற்றி பாலீஷ் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
கிரானைட் வெட்டி எடுக்கப்படும் போது ஒரு சதுர மீட்டருக்கு ரூ.2250 அரசுக்கு கட்டணமாக செலுத்தப்படுகிறது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டிற்கு ணீ40 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் கற்களை வெட்டி எடுக்கும் சில தனியார் நிறுவனங்கள் அரசு விதிமுறைகளுக்கு மாறாக கற்களை வெட்டி எடுப்பதாகவும், அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும் சரியாக செலுத்தாமல் பல கோடி ரூபாய் மோசடி செய்வதாகவும் புகார்கள் வந்தன.
இந்த புகாரை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் சப்,கலெக்டர் நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் கடந்த 6ம் தேதி முதல் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 15 நாட்களாக ஆய்வு நடந்து வருகிறது. இந்த ஆய்வின் போது மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளிலும் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தேன்கனிக்கோட்டை வட்டத்தில் தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் உள்ள குவாரிகளில் கிருஷ்ணகிரி கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 11 குவாரிகளில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கனிவ வளத்துறை அதிகாரிகள் அறிக்கை சமர்பித்துள்ளனர்.
ஆட்சியர் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் சித்ரா நடவடிக்கை எடுத்தார். இதில் 11 கல் குவாரிகளும் ராமச்சந்திரன் எம்எல்ஏ., அவரது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பேரில் இயங்கி வந்தது தெரியவந்தது. இந்நிலையில் நாகமங்கலம் கிராம சர்வே எண் 560, 563ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தளி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் கிரஷர் கம்பெனியினர் 27033 கன மீட்டர் அளவு கொண்ட கற்களை அரசு அனுமதியன்றி, கனிம வளத்திற்கு சேதப்படுத்தி, திருடிச்சென்றதாக நாகமங்கலம் விஏஓ ராமசாமி, உத்தனப்பள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் ராமச்சந்திரன் எம்எல்ஏ மற்றும் அவரது அண்ணன் வரதராஜன், மாமன் குட்டி, சைதாபி உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யய்பட்டுள்ளது. மற்றொரு புகாரின் பேரில் 39 ஆயிரம் கனமீட்டர் அளவு கொண்ட கற்கள் அனுமதியின்றி வெட்டி எடுக்கப்பட்டதாக தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் மற்றும் அவரது முதல் மனைவி விமலா மீது உத்தனப்பள்ளி போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் சந்தனப்பள்ளி கிராமத்தில் சர்வே எண்.1765/6 பட்டா நிலத்தில் அரசுக்கு சொந்தமான விலை உயர்ந்த 1795 கன மீட்டர் கருப்பு கிரானைட் கற்களை கடந்த 2007ம் ஆண்டு முதல் வெட்டி எடுத்து திருடிச் சென்று விற்றதாக சந்தனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் உமர் கர்த்தா தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளார், அதன் பேரில் ராமச்சந்திரன் எம்எல்ஏ, அவரது மனைவி விமலா ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இருதுக்கோட்டை சர்வே எண் 1104/3, 4, 5, 6, நிலத்தில் 177 கன மீட்டர் கருப்பு கல்லை அரசு அனுமதியின்றி திருடிச் சென்று விட்டதாக இருதுக்கோட்டை விஏஓ தோப்பையா அளித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எம்எல்ஏ ராமச்சந்திரன் மற்றும் அவரது அண்ணன் வரதராஜன், மனைவி விமலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கிரானைட் முறைகேடு தொடர்பாக தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் மீது 4 வழக்கும், அவரது மனைவி மீது 3 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் ராமச்சந்திரன் எம்எல்ஏ மற்றும் அவரது மனைவி விமலா கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே பெரியார் தி.க. பிரமுகர் பழனிசாமி கொலை வழக்கில் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
எலக்ட்ரீசியனை தாக்கி நகை, கார் கொள்ளை வழக்கு வாகன சோதனையில் தனிப்படையினரிடம் சிக்கிய 5 பேரில் ஒருவர் தப்பியோட்டம்-பெரம்பலூரில் பரபரப்பு
பள்ளிகொண்டா டோல்கேட்டில் போலீஸ் சோதனை பெங்களூருவில் இருந்து லோடு ஆட்டோவில் கடத்திய ₹5.70 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்-2 பேர் அதிரடி கைது: டிரைவர் தப்பியோட்டம்
சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பப்பட்ட ₹32 லட்சம் மதிப்பு டூவீலர் உதிரி பாகங்களுடன் மினிலாரியை கடத்திய வாலிபர் அதிரடி கைது-வாணியம்பாடியை சேர்ந்தவர்
சேலம் 5 ரோட்டில் துணிகரம் அடுத்தடுத்த 3 கடைகளின் மேற்கூரையை உடைத்து திருட்டு-மர்ம நபருக்கு வலை
மாறி மாறி வெட்டி கொண்ட தந்தை, மகன்: மதுகுடிப்பதை தட்டி கேட்டதால் தகராறு
வாலிபருக்கு சரமாரி அடி: 2 பேர் கைது
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!