SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கைகளில் அலர்ஜி ஏற்பட்டு வாந்தி, மயக்கம்? தமிழகம் முழுக்க மெகந்தி பீதி; பதற்றம

2012-08-20@ 12:47:41

சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மெகந்தி வைத்துக் கொண்ட முஸ்லிம் பெண்கள், குழந்தைகளுக்கு அலர்ஜி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக நேற்றிரவு திடீரென வதந்தி பரவியது. மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் இன்று காலை வரை விடிய விடிய பீதி நிலவியது. வாணியம்பாடியில் மக்களை கட்டுப்படுத்த சென்ற போலீசார் மீது கல்வீச்சு நடந்தது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்றிரவு முஸ்லீம் சமுதாய மக்கள் வீட்டில் குழந்தைகள், பெண்கள் கைகளில் மெகந்தி, மருதாணி வைத்து அழகு படுத்தி கொண்டனர். கடைகளில் கூம்பு வடிவ பாக்கெட்டில் ரெடிமேடாக தயாரித்து விற்பனை செய்யப்படும் மெகந்தியை வைத்து கொண்டனர். தமிழகத்திலும் ரம்ஜான் பண்டிகைக்காக முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் மெகந்தி வைத்து கொண்டனர். அவர்களுக்கு பலருடைய கைகளில் திடீரென அலர்ஜி ஏற்பட்டு தோல் உரிந்ததாகவும், சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் வதந்தி பரவியது.  

சென்னையில் பல இடங்களில் இத்தகவல் காட்டுத்தீ போல் பரவியதால், மெகந்தி வைத்தவர்கள் பீதி அடைந்தனர். உடனே, கைகளை கழுவி சுத்தப்படுத்தினர். மேலும், டாக்டர்களை பார்த்து சிகிச்சை பெற்றனர். சென்னையில் புளியந்தோப்பு, பெரம்பூர், ஓட்டேரி உள்பட பல இடங்களில் பெரும் பீதி ஏற்பட்டது. ராயப்பேட்டையில் முற்றுகை போராட்டமும் நடந்தது.

இதேபோல் சேலம் அரசு மருத்துவமனையிலும் பலர் குவிந்தனர். இரவு 12.30 மணியில் இருந்து விடிய விடிய முஸ்லிம்கள் ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தர்காக்களில் மெகந்தி பற்றி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சி அடைந்த பலர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் திரண்டனர். இங்கு 150 பேருக்கு ஊசி போடப்பட்டது. இதேபோல் சூளகிரி, ஒசூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் வதந்தி பரவி ஆஸ்பத்திரிகளில் திரண்டனர்.

வேலூரிலும் முன்னெச்சரிக்கையாக சிகிச்சை எடுத்து கொள்ள நேற்று இரவு அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுடன் பெண்கள் குவிந்தனர். வாணியம்பாடியில் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற நள்ளிரவு 2 மணியளவில் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். தகவலறிந்த டிஎஸ்பி மாதவன், இன்ஸ்பெக்டர்கள் சிவலிங்கம், ராஜேந்திரன், பழனி மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு வந்து Ôவதந்தியை நம்ப வேண்டாம்Õ என கூறினர். ஆனாலும் சிகிச்சை அளிக்க மக்கள் வலியுறுத்தினர். முண்டியடித்து கொண்டு மருத்துவமனையில் மக்கள் குவிந்தனர். அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது சிலர் திடீரென போலீசார் மீது கல்வீசினர். இதில் டிஎஸ்பி உள்பட பல போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் லேசான தடியடி நடத்தினர். அப்போது ஒரு கும்பல் மருத்துவமனை கதவு மற்றும் ஆம்புலன்ஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

திண்டுக்கல் பேகம்பூர் பாரதிபுரம், பெரியகுளம் அருகே குள்ளப்புரம், குன்னூர், ஊட்டி, கொலக்கம்பை, கோத்தகிரி, அரவக்குறிச்சி, பள்ளபட்டி, பேராவூரணி பகுதிகளிலும் நேற்றிரவு பீதி நிலவியது. ஆயிரக்கணக்கானோர் அரசு மருத்துவமனைகளில் குவிந்தனர். அவர்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன. இதனால் தமிழகம் முழுக்க விடிய விடிய பீதி நிலவியது.

ஆந்திர மாநிலம் பலமனேர், விஜயவாடா, குண்டூர், கடப்பா, பொதட்டூர், அனந்தப்பூர், கதிரி ஆகிய இடங்களிலும் மெகந்தி பீதியால் மருத்துவமனைகளில் பலர் குவிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

is there a cure for chlamydia phuckedporn.com home std test

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்