SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எனது மகளுக்கு வாரிசு இல்லாமல் செய்து விட்டான்: பாண்டியம்மாளின் தந்தை கண்ணீர் பேட்டி

2016-06-26@ 01:04:43

சென்னை : ராயப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட பாண்டியம்மாள் மற்றும் அவரது 3 மகள்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து 4 உடல்களையும் சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட்டது. சென்னை ராயப்பேட்டை பழைய காவல் நிலையம் பின்புறம் உள்ள முத்து தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசிப்பவர் சின்னராஜ் (35). இவர் பட்டினம்பாக்கத்தில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் மாஸ்டராக வேலை ெசய்து வருகிறார். இவருடன் பாண்டியம்மாள் என்ற சந்தன மீனா (38) வசித்த வந்தார். இவர்களுக்கு பவித்ரா (19), பரிமளா (18) மற்றும் ஸ்நேகா (16) என்ற 3 மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி சின்னராஜ் பாண்டியம்மாளின் சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்பியுள்ளார். மறுநாள் பாண்டியம்மாள் மற்றும் 3 மகள்கள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் பாண்டியம்மாளின் 2வது கணவர் சின்னராஜை கைது செய்தனர். கொலையான பாண்டியம்மாள் மற்றும் 3 மகள்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாண்டியம் மாளின் தந்தை பால்சாமி சென்னை வந் தார். அவரிடம் மகள் மற்றும் 3 பேத்திகள் உடல் ஒப்படைக்கப்பட்டது.4 பேரின் உடல்களையும் சென்னை ஐஸ்அவுசில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

பின்னர் பாண்டியம்மாளின் தந்தை பால்சாமி கூறுகையில், விவசாய குடும்பத்தை சேர்ந்த எனக்கு பாண்டியம்மாள் தவிர இரண்டு மகன்கள் வெளிநாட்டில் உள்ளனர்.
பாண்டியம்மாளை நான் நல்ல வசதியான குடும்பத்தில் தான் திருமணம் செய்து கொடுத்தேன். பாண்டியம்மாள் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பாண்டியம்மாள் மற்றும் 3 மகள்களையும் விட்டுவிட்டு தனியாக சென்று விட்டார். அதன்பிறகு பாண்டியம்மாள் என்னுடன் தான் வாழ்ந்து வந்தார். அப்போது தான் சின்னராஜிக்கும் பாண்டியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த 2012ம் ஆண்டே பாண்டியம்மாள் மூன்று மகள்களுடன் எனக்கு தெரியாமல் சின்னராஜியுடன் சென்னைக்கு வந்துவிட்டார்.

ஒரு வருடத்திற்கு பிறகு தான் பாண்டியம்மாள் எனக்கு போன் செய்து நான் நன்றாக இருப்பதாக கூறினார். அதன்படி நானும் பாண்டியம்மாளை வந்து பார்த்துவிட்டு சென்றேன். இருவரும் மகிழ்ச்சியாகத்தான் குடும்பம் நடத்தினர். கடந்த வாரம் குடும்பத்துடன் வந்து என்னை பார்த்துவிட்டு தான் பாண்டியம்மாள் வந்தார். இருவருக்கும் இடையே பிரச்னை இருப்பதாக என்னிடம் கூறவில்லை. சென்னை திரும்பியதும் எனது மகள் மற்றும் 3 பேத்திகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நான் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். மேலும் இந்த படுகொலை தொடர்பாக போலீசார் எங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன்படி நாங்கள் வந்துள்ளோம்.  எனது மகளுக்கு வாரிசு இல்லாமல் செய்த சின்னராஜிவை போலீஸ் சும்மா விடக்கூடாது. அவருக்கு தூக்கு தண்டனை வாங்கி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்