SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை:தருண் விஜய் எம்பி தகவல்

2016-06-18@ 01:39:30

சென்னை: சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாஜ எம்பி தருண்விஜய் சென்னை வந்துள்ளார்.  இவர் நேற்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன்  மற்றும் மேனிலைப் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:
திருவள்ளுவர் கங்கா பயணம்  என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன். திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரில் கங்கை கரையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக 21ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் சிலை எடுத்து செல்லப்படுகிறது. இந்த சிலை கன்னியாகுமரியில் புறப்பட்டு ஈரோடு, எட்டயபுரம், காஞ்சிபுரம் வழியாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரை வந்து சேரும்.

பின்னர், 22ம் தேதி இந்த சிலை கங்கா பயணத்தை ஆளுநர் ரோசய்யா தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் நிறுவப்படும். திருவள்ளுவர் உலகளாவிய புலவர். ராமாயணம், மகாபாரதம், மட்டும் இந்தியாவில் அடங்கி விடாது. திருவள்ளுவர், கண்ணகி, ஆண்டாள், சேர, சோழ, பாண்டியர்கள், ராஜராஜசோழன் உள்ளிட்டவர்கள் இல்லாமல் இந்தியா முழுமை அடையாது.  2000 ஆண்டுகளுக்கு பிறகு திருவள்ளுவர் கங்கை கரையில் பிரதிஷ்டை செய்யப்படுகிறார். இதன் மூலம் திருவள்ளுவர் இந்தியாவை ஒங்கிணைக்கிறார் என்று பொருள். ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவும் நிகழ்வில் 6 மாநில ஆளுநர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து அனைத்து கட்சியின் சார்பிலும் பங்கேற்கின்றனர் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 04-12-2020

    04-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்