SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் இரவு விடுதியில் பயங்கரம் : துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி

2016-06-13@ 00:36:37

மியாமி : அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இரவு விடுதியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும், 53 பேர் வரை படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ நகரில் பல்ஸ் என்ற பெயரில் இரவு விடுதி ஒன்று உள்ளது. இந்த இரவு விடுதியில் ஓரின சேர்க்கையாளர்கள் அதிகளவில் வார இறுதிநாளன்று கூடுவது வழக்கம். இதேபோல் நேற்று அதிகாலை வரையில் விடுதியில் பலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்ேபாது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் விடுதியில் இருந்த கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக சுட்டார். இந்த திடீர் தாக்குதலால் நிலைக்குலைந்த அவர்கள் நாலாப்பக்கமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் 50 பேர் பலியாகினர். மேலும், 53 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் ஒரு கட்டத்தில், விடுதியில் இருந்த சிலரை பிணைக்கைதிகளாக ஒரு அறையில் அடைத்து வைத்து காவல் இருந்தான்.

இச்சம்பவம் குறித்து அறிந்து ேபாலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மர்மநபரிடம் பேச்சு நடத்தினர். ஆனால், அவன் பிணைக்கைதிகளை விடுவிப்பதாக இல்லை. இதையடுத்து, அதிரடிப்படையினர் திடீரென உள்ளே நுழைந்து அவன் மீது தாக்குதல் நடத்தினர். இதில் நிலைக்குலைந்த அவனை, போலீசார் சுட்டுக் கொன்றனர். அதன்பின்னர் பிணைக்கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டனர். அதில் ஒருவர் கூறுகையில், ‘‘இரவு விடுதியில் இசை உச்ச ஸ்தாயில் ஒலித்து கொண்டிருந்தது. விடுதி மூடப்பட வேண்டிய நேரம். அப்போது திடீர் என துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பலர் தரையில் படுத்து பாதுகாத்து கொண்டனர். மர்ம நபர் மேல் தளத்தில் இருந்து சுட்டதாக நினைக்கிறேன். சர விளக்குகளின் கண்ணாடிகள் உடைந்து தூளாகின. அவன் தொடர்ந்து சுட்டு கொண்டே இருந்தான். பின்னர் எங்களை சிறை பிடித்து அறையில் அடைத்தான்’’ என்றார்.

துப்பாக்கியால் சுட்ட நபர் தீவிரவாதியா அல்லது மனநிலை பாதிக்கப்பட்டு இத்தாக்குதலில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த உமர் மதீன் என தெரியவந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு இதே நகரில் பிரபல அமெரிக்க பாடகி கிறிஷ்டினா கிரிம்மி(22) மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

sinemet megaedd.com sinemet

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்