திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளை சம்பா திருமணத்துக்கு பின்பு கவுனி அரிசி உணவு: நெல் திருவிழாவில் சுவாரசிய தகவல்
2016-06-06@ 16:47:47

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் இயற்கை வேளாண் பண்ணையில் கிரியேட், நமது நெல்லை காப்போம் அமைப்புகள் சார்பில் 2 நாள் நடந்த தேசிய அளவிலான நெல் திருவிழா நேற்று நிறைவடைந்தது. மண் வளமும், மேம்பாடும் என்ற தலைப்பில் கோவில்பட்டி வேளாண் அலுவலர் பூச்சி செல்வம் பேசுகையில், ‘இந்தியாவில் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இவற்றையெல்லாம் ரசாயன உரங்களின் வரவால் நாம் இழந்து விட்டோம். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதால் மண்ணில் ரசாயனத்தை பயன்படுத்த துவங்கினோம். அதனால், பாரம்பரிய மருத்துவ குணம் வாய்ந்த நெல்லை இழந்து விட்டோம். ஒரு பிடி மண்ணில் வண்டல், களி, மணல் இருக்க வேண்டும். இவை மூன்றும் சரி விகிதத்தில் இருந்தால் நல்ல மண். இதில் ஏதாவது குறைந்தால் அதற்கு ஏற்றவாறு நாம் பக்குவப்படுத்திட வேண்டும்’ என்றார்.
காரைக்கால் இயற்கை வேளாண் கல்வி நிறுவனத்தை சார்ந்த டாக்டர் உமாமகேஸ்வரி பேசுகையில், ‘இன்றைக்கு உணவால் தான் நோய்கள் அதிகம் வருகிறது. நோயின் தாக்கத்தால் உலகமே அழிவின் விழிம்புக்கு சென்று கொண்டிருக்கிறது. உலகத்தை நல் வழியில் கொண்டு செல்ல எல்லோருக்கும் பொறுப்புண்டு. நோய் இல்லாமல் வாழ வேண்டுமானால் உணவு பழக்க வழக்கம் அவசியம்’ என்றார்.சென்னை எத்திராஜ் கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் சத்துணவியல் துறை பேராசிரியை மேனகா பேசுகையில், ‘பாரம்பரிய நெல்லில் மாப்பிள்ளை சம்பா என்பது திருமணத்திற்கு முன்பு உட்கொள்ள வேண்டியது.
கவுனி அரிசியை திருமணத்திற்கு பிறகும், பூங்காரு என்ற அரிசியை மகப்பேறு காலத்திலும், பால்குடவாரை என்ற அரிசியை குழந்தை பிறந்த பின் பெண்கள் உட்கொள்ள வேண்டும். வாரன்சம்பா என்ற அரிசியை குழந்தை பிறந்த ஆறு மாதம் கழித்து ஊட்ட வேண்டும். காட்டுயானம் கஞ்சி குடித்தால் மூட்டு வழி போகும். இப்படி பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தவை’ என்றார்.
மேலும் செய்திகள்
ஹர்ஷா டொயோட்டா வேலப்பன்சாவடி மற்றும் பல்லாவரம் ஷோரூமில் ‘கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா’ அறிமுகம்.!
இயல்பான பிரசவத்திற்கு கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி: அரசு சித்த மருத்துவர் அசத்தல்
ஆங்கில புத்தாண்டு எப்படி வந்தது?
உடல் பருமனும் மகளிர் நலமும்
ஒரு தம்பதியர் கர்ப்பமடைவதற்கு சிறிது காலம் எடுக்கும் பொழுது அது தாமதமான கருவுறுதல்
தீபாவளியை தித்திப்பாக்க திண்டுக்கல் ஜிலேபி ரெடி
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!