சென்னிமலை மடத்தில் 8 முகம் சிவன் சிலை மீட்பு: மடாதிபதியிடம் போலீசார் விசாரணை
2016-06-05@ 19:04:38

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுந்தர் வீதியை சேர்ந்தவர் சரவணன்(47). இவர் அப்பகுதியில் சித்தர் ஞானபீடம் என்ற பெயரில் மடம் நடத்தினார். இவரது சகோதரர் முருகன்(41) ஜவுளி வியாபாரி. கடந்த 15 நாளுக்கு முன்பு மடத்திற்கு வந்த பக்தர் ஒருவர் 15 சென்டிமீட்டர் உயரம் கொண்ட பித்தளையினால் ஆன 8 முகம் கொண்ட சிவன் சிலையை கொடுத்துள்ளார். இந்த சிலை தனது வீட்டில் இருப்பதால் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருவதாகவும் எனவே மடத்தில் ஒப்படைக்கிறேன் என்றார். இந்நிலையில், 8 முகம் கொண்ட சிலையை தனது செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப் மூலம் தனது சகோதரர் முருகனின் செல்போனுக்கு அனுப்பி உள்ளார். இதை முருகனின் நண்பரான திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த மனோகரனுக்கு அனுப்பி உள்ளனர்.
இதனிடையே சென்னையில் சிலை கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டது தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் மடத்தில் இருக்கும் சிலை கடத்தி வந்ததாக இருக்கலாம் என்று தகவல் வெளியானது. அத்துடன் ஒரு கும்பல் சரவணனை தொடர்பு கொண்டு சிலையை விலைக்கு கேட்டுள்ளனர். இது தொடர்பான தகவல்களை திருப்பூர் குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு கும்பல் சாமி சிலையை கொண்டு வரும் படி கூறியதையடுத்து திருப்பூர் மாவட்டம் படியூர் அருகே பைக்கில் சரவணன் கொண்டு செல்லும் போது சரவணன், இவரது சகோதரர் முருகன், நண்பர் மனோகரன் ஆகிய மூவரையும் திருப்பூர் குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், சிலை கடத்தப்படவில்லை என்பதும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு மடத்திற்கு வந்த பக்தர் ஒருவர் தோட்டத்தில் கிணறு வெட்டும் போது கண்டெடுத்த சிலை என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து நேற்று மாலை சரவணன், முருகன், மனோகரன் ஆகியோரை போலீசார் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலையை சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில் வைத்துள்ளனர். இந்த சிலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இடுக்கி மாவட்டத்தைப் பாதுகாக்க தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும்: கேரள முன்னாள் எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு
பஸ்-வேன் மோதியதில் மூன்று பேர் பலி
புதுவையில் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தில் ஊழல்: நாராயணசாமி பரபரப்பு பேட்டி
பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கானோர் கடலில் நீராடி சுவாமி தரிசனம்
திருப்பூரில் பனியன் கான்ட்ராக்ட் நிறுவனத்தில் டெய்லர் வேலைக்கு தமிழர்கள் தேவை என விளம்பர பதாகை: சமூக வலைதளத்தில் வைரல்
கிராமப்புற கல்விக்கு உதவும் ஜாமீன் வழக்கு டெபாசிட் தொகை ஐகோர்ட் கிளை உத்தரவுகளால் ஸ்மார்ட் ஆகும் அரசு பள்ளிகள்: தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்கிறது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!