SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

16 தொகுதிகளின் முடிவை நிர்ணயித்த நோட்டா

2016-05-21@ 00:15:23

சென்னை:  தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் வாக்களிப்பதற்காக நோட்டா உருவாக்கப்பட்டது. நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் 16 தொகுதிகளில் அதிமுக வெற்றியை நிர்ணயித்து உள்ளனர்.

* ஆவடியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். திமுக 1,395 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த தொகுதியில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் 4,994 பேர்.

* பர்கூரில் அதிமுக வெற்றி பெற்றது. திமுக 982 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது. இந்த தொகுதியில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் 1,382.

* சிதம்பரம் தொகுதியில் அதிமுக வெற்றி ெபற்றது. 1,506 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி வாய்ப்பு இழந்தது. நோட்டா பெற்ற வாக்குகள் 1,724.

* கரூரில் அதிமுக வெற்றி. 3,154 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது. நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் 3,595.

* காட்டுமன்னார் கோவில் தொகுதியில் அதிமுக வெற்றி. 87 வாக்கு வித்தியாசத்தில் விசிக தோல்வி அடைந்தது. நோட்டா பெற்ற வாக்குகள் 1,025.

* கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வெற்றி. திமுக 1,332 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நோட்டா பெற்ற வாக்குகள் 3,884.

* கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றி. 428 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வி அடைந்தது. நோட்டா பெற்ற வாக்குகள் 2,350.

* மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக வெற்றி. திமுக 2,222 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 2,715.

* ஒட்டபிடாரம் தொகுதியில் அதிமுக வெற்றி. புதிய தமிழகம் வேட்பாளர் 393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். நோட்டா பெற்ற வாக்குகள் 2,612.

* பெரம்பூர் தொகுதியில் அதிமுக வெற்றி. 519 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 3,167.

* பேராவூரணி தொகுதியில் அதிமுக வெற்றி. திமுக 995 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 1,294.

*  ராதாபுரம் அதிமுக வெற்றி. திமுக 49 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 1,821.

* தென்காசியில் அதிமுக வெற்றி. திமுக 462 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 3,391.

* திருப்போரூர் அதிமுக வெற்றி. 950 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 2,116.

* தியாகராயநகர் தொகுதியில் அதிமுக வெற்றி. 3,155 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 3,570.

* விருகம்பாக்கம் தொகுதியில் அதிமுக வெற்றி. 2,333 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 3,897.

venlafaxine forum mdwguide.com venlafaxine 150
plavix tonydyson.co.uk plavix plm
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்