SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக கூட்டணி வேட்பாளர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

2016-04-30@ 00:36:14

சென்னை: தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்துவிட்டதாக அதிமுக கூட்டணி வேட்பாளர் மீது போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவராக இருப்பவர் தமீம் மரைக்காயர் (36). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார் மனு:எங்கள் கட்சியின் தலைமை அலுவலகம் தேனாம்பேட்டையில் உள்ளது. கட்சியின் தலைவராக ஷேக் தாவூத்தும், பொதுச் செயலாளராக ரேஸ்மா தாவூத் (ேஷக் தாவூத் மகள்), பொருளாளராக ஜலாலூதீன் (ஷேக் தாவூத் மருமகன்) உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் சென்னை அலுவலகத்தில் வைத்து ஷேக் தாவூத் என்னிடம் அதிமுக கூட்டணியில் நமக்கு 3 சீட்கள் கிடைக்கும். அதில், உனக்கு ஒரு சீட் தருகிறேன். அதற்கு நீ ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று கூறினார். அதன் அடிப்படையில் கடந்த மார்ச் 22ம் தேதி ஜலாலூதீன் வங்கி கணக்கிற்கு  ரூ.10 லட்சம் செலுத்தினேன். தற்போது, ஷேக் தாவூத் மட்டும் அதிமுக கூட்டணி சார்பில் கடையநல்லூர் தொகுதியில் நிற்க இடம் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு சீட் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கேட்டபோது, பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் தற்போது பணத்தை தர முடியாது என்று ஷேக் தாவூத் மிரட்டுகிறார். என்னைப்போல பலரிடம் சீட் வாங்கி தருவதாக ஷேக் தாவூத்தும் அவரது மகள், மருமகனும் ஏமாற்றியுள்ளனர். எனவே, என்னிடம் சீட் வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்த ஷேக் தாவூத், ரேஸ்மா தாவூத், ஜலாலூதீன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்